#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
விராட் கோலி: 'நாங்கெல்லாம் அப்பவே அப்புடி' பாகிஸ்தான் வெற்றியை எப்படி கொண்டாடியுள்ளார் பாருங்க.!
உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் தற்போது இங்கிலாந்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. நேற்று நடந்த போட்டியில் வங்கதேச அணி வெஸ்ட் இண்டீஸ் அணியை வீழ்த்தி வரலாற்று வெற்றியை பதிவு செய்துள்ளது. அதேபோல் நேற்றுமுன்தினம் இந்தியா பாகிஸ்தான் ரசிகர்கள் மட்டும் மட்டுமல்லாது உலகின் பல்வேறு நாடுகளில் இருந்தும் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்நோக்கியிருந்த இந்தியா பாகிஸ்தான் போட்டி பரபரப்பாக நடைபெற்றது.
மழையால் ஆட்டம் தடைபடுமோ என்று ரசிகர்கள் மத்தியில் அச்சம் நிலவிய நிலையில் சிறிது நேரம் தடைபட்டாலும் இந்திய அணி வெற்றி பெற்றது. முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 337 ரன்களை பாகிஸ்தானுக்கு இலக்காக நிர்ணயித்தது. அதன்பிறகு பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி இலக்கை எட்ட முடியாததால் இந்திய அணி 89 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
Doing it since the early 90s! 🤓 pic.twitter.com/IVitRHUWpW
— Virat Kohli (@imVkohli) June 17, 2019
தொடர்ந்து உலக கோப்பை தொடரில் இந்திய அணியை வீழ்த்த முடியாத பாகிஸ்தான் அணியின் சோகம் தொடருகிறது. இந்த போட்டியையும் சேர்த்து இந்திய அணி 7 போட்டிகளில் வெற்றி பெற்று தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தி வருகிறது.
இந்நிலையில் பாகிஸ்தான் அணிக்கு எதிரான வெற்றியை இந்திய கேப்டன் விராட் கோலி வித்தியாசமாக கொண்டாடியுள்ளார். கடந்த 1990ல் எடுத்த தனது சிறு வயது போட்டோவை, தற்போது அதே போல போஸ் கொடுத்த போட்டோவுடன் ஒன்றாக இணைத்து தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
அதில், ‘இதை கடந்த 1990 முதல் செய்து வருகிறேன்.’ என குறிப்பிட்டுள்ளார். பாகிஸ்தான் வெற்றியை விராட் கோலி வித்தியாசமாக கொண்டாடுவதற்காக வெளியிட்ட போட்டோவை சமூக வலைதளத்தில் ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர்.