பிக்பாஸ் வீட்டில் கர்ப்பமான அன்ஷிதா.. ரயான் கேட்ட கேள்வி.. வைரலாகும் வீடியோ.!
நாளை ஆடி செவ்வாய், குழந்தை பாக்கியத்திற்கு இதை தவற விடாதீர்கள்.!
இரட்டிப்பு பலன் கிடைக்க
ஆடி செவ்வாயில் அம்மனுக்கு மிகவும் வழிபாடு நடத்த உகந்த நாளாக கருதப்படுகிறது. நாம் வழிபடுவதற்கு முன்பு நமது இருப்பிடம் சுத்தமாக இருக்க வேண்டும். பொதுவாக விரத வழிபாடு அனைத்தும் பெண்கள் மட்டும் தான் வீட்டில் மேற்கொள்கின்றனர். அதுதான் பலன் கொடுக்கும் என்று பலரும் நம்புகின்றனர். உண்மை என்னவென்றால், பெண்களை விட ஆண்கள் இதுபோன்ற வழிபாடு நெறிமுறைகளை மேற்கொள்ளும்போது இரட்டிப்பு பலன்கள் கிடைக்கும் என்று சாஸ்திரங்கள் குறிப்பிடுகின்றன.
தோஷ நிவர்த்தி
ஆடி மாத செவ்வாய்க்கிழமையில் விரதம் இருந்து வழிபட்டால் வீட்டில் சுபிட்சம் கிடைக்கும். ஜாதகத்தில் இருக்கும் ராகு கேது தோஷம், செவ்வாய் தோஷம், நாக தோஷம், போன்ற எந்த விதமான தோஷமாக இருந்தாலும் இந்த ஆடி செவ்வாயில் அம்மனை விரதம் இருந்து வழிபடும்போது அதிலிருந்து விடுதலை கிடைக்கும். கோவிலுக்கு சென்று வழிபட நேரம் இருந்தால் செய்யலாம் அப்படி இல்லை என்றால் வீட்டில் இருந்தபடியே எளிமையாக பூஜை செய்தால் கூட நமக்கு பலன் கிடைக்கும்.
விரதமிருக்கும் முறை
இரண்டு குத்து விளக்குகளில் பஞ்சதீப எண்ணெய் அல்லது விளக்கு ஏற்றும் எண்ணெய் ஊற்றி குத்து விளக்குகளை ஏற்றி சாம்பிராணி போட்டு அந்த புகையை வீடு மற்றும் பூஜை அறை முழுவதும் பரவ வைக்க வேண்டும். உங்கள் குலதெய்வத்தை நினைத்து ஆடி செவ்வாயில் வீட்டில் இருக்கும் தெய்வங்களை வழிபட வேண்டும். அன்றைய நாள் முழுவதும் உணவு எதுவும் எடுத்துக் கொள்ளாமல் முழுதாக விரதம் இருக்க வேண்டும்.
நம்பிக்கை அவசியம்
இந்த உண்ணாவிரதத்தை நாம் ஏற்றுக் கொள்வதால் நமது உடலுக்கும், மனதுக்கும் நன்மை கிடைக்கும். சிலரால் பசி தாங்க முடியவில்லை என்றால் பால் அல்லது ஏதேனும் பழங்களை சாப்பிடலாம். உங்கள் உடல்நிலை ஏற்றுக்கொள்ளும் வழியில் தான் விரதத்தை மேற்கொள்ள வேண்டும். விரதத்தை நாம் உடலை வருத்தி செய்ய வேண்டிய அவசியம் எல்லாம் இல்லை. அதை கடவுளும் விரும்புவதில்லை. இறைவழிபாட்டை முடித்துவிட்டு பின்னர் உணவு உண்ண வேண்டும். சில நாள் சாப்பிடாமல் விரதம் இருக்க முடியும். ஆனால் சிலரால் அது முடியாது. எப்படி இருந்தாலும் சுத்தமான மனதோடு முழு இறை நம்பிக்கையோடு விரதம் இருப்பது கடவுளின் அருளை கிடைக்கச் செய்யும்.
குங்கும தானம்
அம்மனுக்கு என்ன படையில் செய்யலாம் என்ற சந்தேகம் பலருக்கும் இருக்கலாம். அவர்களுக்கு பால் பாயாசம், சர்க்கரை பொங்கல், கேசரி போன்ற பதார்த்தங்களை செய்து படையல் வைக்கலாம். இந்த பதார்த்தங்களை செய்யும் போது சுத்தபத்தமாக செய்வது அவசியம். காமாட்சி அம்மன் விளக்கை ஏற்றி வைத்துக்கொண்டு அந்த விளக்கு ஒளிக்கு முன்பாக குங்கும சிமிழை அமர்ந்து அம்மனுக்கு நிவேதனம் செய்யுங்கள். வீட்டின் அருகில் இருக்கும் 11 சுமங்கலி பெண்களுக்கு, நம் வீட்டில் இருக்கும் பெண்கள் கையால் அந்த குங்குமத்தை கொடுக்கச் செய்யலாம்.
குழந்தை பாக்கியம்
நிறைய பேருக்கு திருமணமாகி பல வருடங்கள் ஆகியும் குழந்தை பிறக்காமல் இருக்கும். அவர்கள் இந்த பூஜையை மேற்கொண்டால் நிச்சயம் பலன் கிடைக்கும். குழந்தைக்காக முயற்சி செய்யும் தம்பதிகள் இருவரும் சேர்ந்து இந்த விரதத்தை மேற்கொண்டு நிவேதனம் செய்து பின்னர் பிரசாதத்தை சாப்பிட்டு விரதத்தை நிறைவு செய்தால் நிச்சயம் பலன் கிடைக்கும். குழந்தை பாக்கியத்திற்காக காத்திருப்பவர்கள் ஆடி மாதத்தில் வரும் அனைத்து செவ்வாய்களிலும் இந்த விரதத்தை மேற்கொள்வது நல்லது.