மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
கொட்டும் மழையிலும் நனைந்தபடி அங்காளம்மனை தரிசனம் செய்த பக்தர்கள்.!
விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள மேல்மலையனூர் அங்காளம்மன் கோவிலில், வியாழக்கிழமை அன்று வைகாசி மாத அமாவாசை ஊஞ்சல் உற்சவமானது நடைபெற்றது. இதனை மக்கள் மழை பெய்தபோதும்,, அதில் நனைந்தபடி கண்டு ரசித்து அம்மனை தரிசனம் செய்தனர்.
நேற்று அதிகாலை அங்காளம்மனுக்கு பால், தயிர், இளநீர், தேன் கொண்டு சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனை செய்யப்பட்டது. அதனைத்தொடர்ந்து தங்கக்கவசம் அணிவிக்கப்பட்டு மகா தீபாராதனையும் செய்யப்பட்டது. பின் மலர் சிறப்பு அலங்காரமும் நடைபெற்றது.
சிறப்பு அலங்காரத்துடன் தரிசனம்
இரவு 10:30 மணியளவில் வடக்கு வாசல் வழியே அம்மன் ஊஞ்சல் மண்டபத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சிதந்தார். ஊஞ்சல் மண்டபத்தில் நின்ற இலட்சக்கணக்கான பக்தர்கள் தீபமேற்றி அம்மனை வழிபட்டு இருந்தனர். பின் 11:45 மணியளவில் அம்மன் கோவில் மண்டபத்திற்கு அழைத்து செல்லப்பட்டார்.
ஊஞ்சல் உற்சாகத்தை காண விழுப்புரம், கடலூர், சேலம், வேலூர், திருவண்ணாமலை, காஞ்சிபுரம், சென்னை மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, கர்நாடகா உட்பட பல மாநிலத்தை சேர்ந்தவர்களும் இலட்சக்கணக்கில் திரண்டு இருந்தனர். மேல்மலையனூர் செல்ல செஞ்சி, விழுப்புரம், திருவண்ணாமலை உட்பட பல நகரங்களில் இருந்து விழுப்புரம் கோட்டம் சார்பில் சிறப்பு பேருந்துகளும் இயக்கப்படுகின்றன.
இன்று வெள்ளிக்கிழமை மேல்மலையனூர் அருள்மிகு அங்காளம்மன் அருளால் தாங்கள் சிறப்புடன் வாழ வேண்டுகிறேன். இனிய காலை வணக்கம். pic.twitter.com/cHIypNRXBL
— kumar srivatsa 🇮🇳 (@kumarsrivatsa) June 7, 2024