நீங்கள் பிறந்த கிழமை எது?.. உங்களின் குணம் இப்படித்தான் இருக்குமாம்.. உறுதி செய்ய படிச்சி தெரிஞ்சிக்கோங்க.!



Birthday day Benefit spirituality

ஒருவர் பிறந்த தேதி, நட்சத்திரம் போன்றவை அவர்களின் வாழ்நாட்களில் ஜோதிடத்தை வைத்து கணிக்கணிக்க முக்கியமானதாக கருதப்படுகிறது. அதன் வாயிலாக அவர்களின் குணநலன்களை அறிய முடியும். இன்று எந்தெந்த கிழமையில் பிறந்தால் எப்படி இருப்பார்கள் என்பதை காணலாம்.

ஞாயிற்றுக்கிழமையில் பிறந்தவர்கள் எந்த ஒரு செயலில் ஈடுபட்டாலும் வென்று முடிக்கும் வரை ஓயாது பணியாற்றுவார்கள், அத்தகையை குணமுடையவர்கள். மனதில் என்ன தோன்றுகிறதோ அதனை பேசி செய்யும் நபர்கள். பிறரை விட கடினமான செயல்களையும் இவர்கள் செய்வார்கள். அதே போல ஆளுமை திறன் கொண்டவர்கள்.

திங்கட்கிழமை பிறந்தவர்கள் வசீகரமான தோற்றம், நகைச்சுவை மிக்க பேச்சாற்றல் போன்றவற்றால் பிறரின் மனதை எளிதில் ஆட்கொள்வார்கள். இவர்களுக்கு நண்பர்கள் பட்டியல் அதிகமாகவே இருக்கும். வீட்டில் இருக்கும் நேரத்தை விட நண்பர்களுடன் பொழுது போக்குவார்கள். எங்கிருந்தாலும் அந்த சூழ்நிலையை தனதாக்கி செயல்படுவார்கள். உதவி என்று யார் வந்தாலும், உடனே செய்யும் குணம் கொண்டவர்கள். கை செலவுக்கு பணம் இல்லாமல் அவதிப்படுவதும் உண்டு.

செவ்வாய்க்கிழமை பிறந்தவர்கள் வீண் வம்பு சண்டைக்கு செல்ல மாட்டார்கள். வந்த சண்டையை விடவும் மாட்டார்கள். இவர்கள் பேசும் போது பிறர் கவனமாக பேச வேண்டும். மணி அடிப்பது போல மிகச் சரியாக எதிராளியை உரிய ஆயுதத்தோடு கையாளுவார்கள். அதிக கோபம் கொண்ட இவர்கள் கோபத்தில் குணம் கொண்டவர்கள். 

ஆன்மீகம்

புதன்கிழமை பிறந்தவர்கள் ஏதேனும் எழுதிக் கொண்டு படித்துக் கொண்டே இருப்பார்கள். தங்களுக்கு தேவையில்லை என்றாலும் கூட அதை அறிந்து கொள்வார்கள். கூச்ச சுபாவம் கொண்ட இவர்கள், நண்பர்களை தேர்ந்தெடுத்து பழகுவார்கள். பழகிவிட்டால் நட்புக்காக உயிரையும் கொடுப்பார்கள்.

வியாழக்கிழமை பிறந்தவர்கள் நன்னெறிக்கு இருப்பிடமாக இருப்பார்கள். இவர்கள் தேவையில்லாத பிரச்சனைகளில் எளிதில் சிக்க மாட்டார்கள். தண்டக்கம் மிக்கவர்களாகவும் இருப்பார்கள். இவரை கர்வம் பிடித்தவர் என்றும் சிலர் கூறலாம். தெய்வ வழிபாடு ஆன்மீக சொற்பொழிவை கேட்பதில் இவர்களுக்கு ஆர்வம் அதிகம்.

வெள்ளிக்கிழமையில் பிறந்தவர்கள் வாழ்க்கையில் சகல சுகங்களையும் அனுபவிக்க பிறந்தவர்களாக, வாழ்க்கை வாழ்வதற்கு என்று இவர்கள் வாழ்வார்கள். அதனால் தங்களது மனதுக்கு பிடிக்கும் விஷயத்தை எந்த ஒரு சூழலிலும் அடைந்தே தீருவார்கள். சுற்றுலாவுக்கு மிகப்பெரிய பிரியர்களான இவர்கள் காலில் சக்கரம் கெட்டதா குறை தான் என பயணிப்பார்கள். இவரது உழைப்பு பெரும்பாலும் பிறருக்கே சென்று சேரும். புகழ்ச்சியை விரும்பும் இவர்கள், எல்லோரையும் எளிதாக நம்பிவிடும் குணம் கொண்டவர்கள். 

ஆன்மீகம்

சனிக்கிழமை பிறந்தவர்கள் உறங்கினால் கும்பகர்ணன், எழுந்து நின்றால் இந்திரஜித். சோம்பல் மற்றும் அதனை தள்ளிப் போடுதல் இவர்களின் பிறவி குணமாகும். நண்பர்களுக்காக எதையும் செய்யும் குணம் கொண்டவர்கள். எதிலும் அலட்சியப் போக்கு, கவலைப்படாத மனோபாவத்துடன் இருப்பார்கள். ஆனால் ஒரு காரியத்திற்கு வர வேண்டிய நேரத்தில் சரியாகவும் வருவார்கள். எதிலும் எளிமையான வழியை பின்பற்றும் இவர்கள், மேற்கிலிருந்து கிழக்கே பார்க்கும் குணம் கொண்டவர்கள். பிறரிடமிருந்து வேறுபட்டு இருக்கும் இவர்கள், அனைவரிடமும் சுமுகமான உறவை கொண்டு இருப்பார்கள்.