செவ்வாய் வக்ரபெயர்ச்சி.. 5 ராசிக்கு ஆப்பு.. மிக மிக கவனம் வேண்டும்.!



chevvai vakra peyarchi 2025 problems for 5 zodiac

5 ராசிக்காரர்கள் கவனம்

ஒருவரின் பிறந்த ஜாதகத்தில் உள்ள ராசி, நட்சத்திரம் ஆகியவற்றின் அடிப்படையில் தான் அவரது எதிர்காலம் அடங்கி இருக்கிறது என்று நம்பப்படுகிறது. அந்த வகையில், செவ்வாய் வக்ர பயிற்சியால் 5 ராசிக்காரர்கள் கவனமாக செயல்பட வேண்டும் என்று ஜோதிடர்கள் அறிவுறுத்தி இருக்கின்றனர்.

செவ்வாய் வக்ர நிலை

இந்த மாதம் கும்ப ராசியில் இருக்கும் சுக்கிரன் மீன ராசிக்கு பெயர்ச்சி அடைகிறார். அதே சமயத்தில், செவ்வாய் வக்ர நிலைக்கு செல்கின்றார். இதன் காரணமாக பின்வரும் 5 ராசிகள் மிக மிக கவனத்துடன் செயல்பட வேண்டும் என்று ஜோதிடர்கள் தெரிவிக்கின்றனர்.

இதையும் படிங்க: 9 வியாழன்கள் சாய் பாபா விரதம்.. வேண்டுதல் அப்படியே நடக்கும்.! எப்படி மேற்கொள்வது.?!

செவ்வாய்

நிதானம் அவசியம்

அதன்படி கும்பம், கன்னி, ரிஷபம், மகரம், துலாம் உள்ளிட்ட 5 ராசிகாரர்களும் மிகவும் கவனமாக செயல்பட வேண்டும். எந்த ஒரு விஷயத்தை செய்வதற்கு முன்னும் எச்சரிக்கையுடன் யோசித்து நிதானமாக அதனை செயல்படுத்த வேண்டும். உடல் நலனில் ஏதாவது கோளாறு ஏற்பட்டால் அதனை அலட்சியம் செய்யாமல் உடனடியாக மருத்துவமனைக்கு சென்று பார்க்க வேண்டும். இல்லை எனில் அது பேரிழப்பை ஏற்படுத்தும் நிலைக்கு கொண்டு சென்று விடும்.

வார்த்தைகளில் கவனம்

மற்றவர்களிடம் பேசும்போது வார்த்தைகளை மிக கவனமாக கையாள வேண்டும். வாய் வார்த்தை நீதிமன்றம் வரை கூட இழுத்துச் செல்லும் அபாயம் இருக்கிறது. தொழிலில் எடுக்கும் முடிவுகள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். பிறரின் பேச்சை கேட்டோ அல்லது அவசர கதியிலோ எந்த முடிவையும் எடுத்து தொழிலில் செயல்படுத்தாதீர்கள். இதனால், இதுவரை நீங்கள் கட்டிக் காப்பாற்றிய தொழில் மொத்தமாக சரியலாம்.

இதையும் படிங்க: நாளை வியாழன்.. கொட்டிக்கொடுக்கும்.. குருவுக்கு விரதம் இருந்தால் நடக்கும் அதிசயம்.!