ஷிவ்ராஜ்குமாரின் மிரட்டல் லுக்.. 45 படத்தின் அலறவைக்கும் டீசர்.!
ரிஷபத்தில் வக்ரபெயர்ச்சி.. 5 ராசிகளுக்கு குருவால் நடக்கப்போகும் அதிசயம்.!

நவகிரகங்களில் மங்களகரமான கிரகமாக கருதப்படுவது குரு பகவான் தான். 2025 இல் குரு பகவான் 84 நாட்களுக்கு வக்கிர பெயர்ச்சி அடைகிறார். ரிஷப ராசியில் குரு வக்ர பயிற்சி அடைவதால் குறிப்பிட்ட சில ராசிகளுக்கு தங்களது வாழ்வில் அதிர்ஷ்டம் கிடைக்க பெறுவார்கள். அப்படிப்பட்ட ராசிகள் எவை என்று பார்க்கலாம்.
ரிஷப ராசி
புதிய சொத்துக்கள், நிதி ஆதாயம் பெரும் வாய்ப்புகள் ஏற்படும். மாணவர்கள் கல்வியில் சிறப்பாக செயல்படுவார்கள். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். செல்வம் மற்றும் சொத்துக்கள் அதிகரித்து வாழ்க்கை தரம் மேம்படும். குடும்ப உறவுகளிடையே சமூகமான நிலவரம் ஏற்படும்.
சிம்ம ராசி
உயர் பதவிகள் வந்து சேர்வதுடன் தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். வாழ்க்கை மீதான நம்பிக்கை அதிகரிக்க கூடிய காலகட்டம். மன அமைதி ஏற்படுவதுடன், திருமண வாழ்வில் எதிர்பார்த்த மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். திருமணம் ஆகாதவர்களுக்கு நல்ல செய்திகள் வந்து சேரும். திருமண வாழ்வில் ஒற்றுமையும், அன்பும் அதிகரிக்கும்.
விருச்சிக ராசி
புதிய வருமானங்கள் அதிகரிப்பதால் செல்வ செழிப்பு அதிகரிக்கும். உடல்நல பிரச்சனைகள் ஏதாவது இது நாள் வரை இருந்து வந்தால் இப்போது சரியாகும். வெளிநாட்டு பயணங்கள் ஏற்படும். வெளிநாட்டில் வேலை வாய்ப்பு அல்லது படிப்பிற்காக காத்திருப்பவர்களுக்கு நல்ல செய்திகள் வந்து சேரும். மன அமைதி ஏற்படும். குடும்ப உறவுகளுடன் மகிழ்ச்சியான சூழல் நிலவும்.
மகர ராசி
புதிய பொறுப்புகள், பதவி உயர்வு முதலீடுகள் உள்ளிட்டவை உண்டாகும். பணத்தை சேமித்து வெற்றி பெறும் வாய்ப்பு அதிகரிக்கும். சக்தியையும், நேரத்தையும் இப்போது சரியான திசையில் செலுத்தினால் நிச்சயமாக வெற்றியை பெற முடியும். மாணவர்கள் போட்டி தேர்வுகளில் வெற்றி பெற க்கூடிய காலம்.
மீன ராசி
சுயமரியாதை மற்றும் முன்னேற்றம் ஏற்படக்கூடிய காலகட்டம். நீண்ட காலமாக இருந்து வந்த பண தட்டுப்பாடு நீங்கி பணவரவு ஏற்படும். ரகசியமாக சில காரியங்களை மேற்கொள்வது உங்களுக்கு நன்மை பயக்கும். திருமண வாழ்க்கையில் நம்பிக்கையும், மகிழ்ச்சியும் அதிகரிக்கும். மன வலிமையும், உடல் வலிமையும் மேம்படுவதுடன் உங்களது ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.