மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
பலரும் தெரிந்திடாத திருப்பதி ஏழுமலையான் கோயில் வரலாறு! ஏழுமலையானுக்கு குவியும் தொகை எங்கு செல்கிறது?
திருப்பதி ஏழுமலையான் கோயில் இந்திய நாட்டிலுள்ள மிகப்பழமையான புகழ் பெற்ற ஆன்மீக யாத்திரை ஸ்தலமாகும். இது திருவேங்கட மலையின் 7வது சிகரத்தில் அமைந்துள்ளது. புஷ்கரணி ஆற்றின் தெற்கே அமைந்துள்ள இந்த கோயில் முழுக்க முழுக்க திராவிட பாரம்பரிய கோயிற்கலை கட்டுமான அம்சங்களுடன் நிர்மாணிக்கப்பட்டுள்ளது.
2.2 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள இந்த கோயிலின் உள்ளே 8 அடி உயர வெங்கடேஸ்வரர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. ஏழுமலையான் கோவிலின் சுவற்றில் உள்ள அணைத்து எழுத்துக்களும் தமிழ் மொழியில் பொறிக்கப்பட்டுள்ளது.
திருப்பதிக்கு சென்றால் திருப்பம் வரும் என்று கூறுவது வழக்கம். திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வாழ்வில் நல்ல திருப்பத்தைத் தரும் திருத்தலம், பணம் நிரம்பி வழியும் உண்டி, அற்புத ருசி தரும் லட்டு, லட்சக்கணக்கான மொட்டைத் தலைகள், கோவிந்தா என்று உருகும் கோஷம் என சொல்லிக்கொண்டே போகலாம்.
இந்து தொன்மவியலின் அடிப்படையில் குபேரன் செல்வத்தின் அதிபதியாவார். திருப்பதி ஏழுமலையானுக்கு குபேரன் கடன் கொடுத்ததாக கதையுண்டு. பத்மாவதி தாயாரை காதலித்த வெங்கடாஜலபதி, அவரை திருமணம் செய்து கொள்ள குபேரனிடம் கடன் வாங்கியதாகவும், அந்த கடனை இன்னும் அடைக்காமல் இருப்பதாகவும் புராணங்கள் கூறுகின்றன.
திருப்பாற்கடல் வந்த பிருகு முனிவர், தன்னை கண்டுகொள்ளாமல் அவமதித்ததாக மஹாவிஷ்ணு மார்பில் எட்டி உதைத்தார். அடி வாங்கியும் அமைதியான விஷ்ணுவோ, முனிவரின் காலை அழுத்தி பிடித்து விட்டார். இதை கண்டதும் முனிவர் தன் செயலுக்காக வெட்கப்பட்டார். மகாலட்சுமிக்கு கோபம் வந்தது. எட்டி உதைத்த முனிவரை சக்ராயுதத்தால் வெட்டி வீழ்த்தாமல், ஒத்தடம் கொடுக்கிறாரே என்று கோபத்துடன் வெளியேறி பூலோகத்தில் ஒரு அரண்மனை தோட்டத்தில் குழந்தையாய் கிடந்தாள்.
மன்னன் ஆகாச ராஜன் இந்த குழந்தையை தன் மகளாக வளர்த்தார். மகாலட்சுமி இல்லாமல் வருந்திய விஷ்ணு, உடனே ஸ்ரீநிவாசன் என்ற பெயரில் வேடனாக பூலோகம் வந்தார். ஆகாசராஜனின் மகளாக, பத்மாவதி என்ற பெயருடன் மகாலட்சுமி வளர்வது கண்டு அவள் மீது காதல் கொண்டார். பத்மாவதிக்கும் காதல் மலர்ந்தது. திருமணம் முடிக்க சம்மதித்த ஆகாசராஜன், பல கோடிக்கு சீதனம் தரவேண்டும் என்று நிர்ப்பந்தித்தார்.
உடனே ஸ்ரீநிவாசனான மஹாவிஷ்ணு குபேரனை அணுகி ஆயிரம் கோடி வராகன் (பன்றி முத்திரையுடன் கூடிய பொற்காசு) கடனாக பெற்றார். இதற்காக ஒரு கடன் பத்திரமும் எழுதப்பட்டது. கலியுகம் முடியும்வரை வட்டி மட்டுமே செலுத்தினால் போதும். அடுத்த யுகத்தில் அசலை அடைத்து விட வேண்டும் என்பதே அந்த பாத்திரத்தில் உள்ள நிபந்தனை.
அதர்மமான வகையில் கோடியை போடுவோர் காணிக்கையை வட்டியாகவும், தர்ம வழியில் சம்பாதிப்போர் காணிக்கையை அசலின் ஒரு பகுதியாகவும் பெறுவது என்று ஏழுமலையான் முடிவு செய்தார்.
நாட்டிலேயே அதிக வருவாய் ஈட்டும் கோவில்களில் ஒன்றான திருப்பதிக்கு, ஆண்டு தோறும் வரும் பக்தர்கள் எண்ணிக்கை அதிகரித்த வண்ணம் உள்ளது. மேலும், ஏழுமலையானை தரிசிக்கும் பக்தர்கள், பணம், நகை, விலை உயர்ந்த பொருட்கள் போன்றவற்றை உண்டியலில் காணிக்கையாக செலுத்துகின்றனர்.
திருப்பதி வெங்கடாசலபதி கோயிலில் குபேர காணிக்கை எனும் பெயரில் குபேரனுக்கு காணிக்கை தரப்படுகிறது. இதற்கென தனி அதிகாரி கோவில் நிர்வாகத்தினரால் நியமிக்கப்பட்டுள்ளார்.