மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
குழந்தையில்லா தம்பதிகள்.. இந்த ஒரு தானம் செய்யுங்கள்.. வீட்டில் குவா குவா சத்தம் கேட்கும்.!
நாம் செய்கின்ற பாவங்களை போக்க தானம் செய்வது மிகப்பெரிய அளவில் கை கொடுக்கும். இது அனைவருக்கும் தெரிந்தாலும் கூட எல்லோராலும் எல்லா தானமும் செய்ய முடிவதில்லை. தானங்களில் பல்வேறு வகைகள் இருக்கின்றன. ஒவ்வொரு தானத்திற்கும் ஒவ்வொரு பலன் கிடைக்கும். இது பற்றி இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
வறுமையில் வாழ்பவர்களுக்கு ஆடை தானம் செய்வது நமக்கு ஆயுளை அதிகரிக்கும். தானத்திலேயே மிகச்சிறந்தது அன்னதானம் தான். பசியில் வாடுபவர்களுக்கு வயிறார உணவளிப்பதன் மூலம் கடன் தொல்லையில் இருந்து நாம் விடுபட முடியும். வீட்டில் செல்வம் பெருகும்.
கோவில் கட்ட தனது சொந்த இடத்தை தானமாக அளிப்பது மற்றும் வீடு இல்லாமல் இருக்கும் ஏழைக்கு வீடு கட்டிக்கொள்ள இடம் கொடுப்பது உள்ளிட்ட செயல்கள் சிவனை தரிசிக்க வாய்ப்புகளை ஏற்படுத்தி கொடுக்கும். மனக்குழப்பத்தில் இருக்கும் நபர்கள் நோய் நொடியில் வாடும் ஏழைகளுக்கு பழங்களை தானமாக கொடுத்தால் குழப்பத்தில் இருந்து விடுதலை கிடைக்கும். வீட்டில், யாருக்காவது மனப்பிறழ்வு இருந்தால் இந்த முயற்சி அவர்களை குணப்படுத்தும். மடிப்பிச்சை கேட்டு வரும் நபர்களுக்கும், ஏழை குடும்பத்திற்கும் அரிசியை தானம் செய்தால் நமது பூர்வ ஜென்ம பாவங்கள் அனைத்தும் நீங்கும். கோவிலில் இருக்கும் தீபத்திற்கு எண்ணையை தானமாக கொடுப்பது கண் பார்வை தெளிவு பெற உதவும்.
நமது முன்னோர்கள் பாவம் செய்திருந்தால் அந்தப் பாவமும் இதன் மூலம் நம்மை அண்டாது. நோயில் வாடும் வரியவருக்கு பாலை தானமாக கொடுப்பது நமது துக்கங்களை போக்கும். இறைவனுக்கு அபிஷேகம் செய்ய நெய் தானம் செய்வது நோய் நொடிகளை போக்கும். திருமணமாகாத நபர்கள் தேங்காயை தானம் செய்தால் அவர்களுக்கு விரைவில் திருமணம் நடக்கும். கடவுளுக்கு அபிஷேகம் செய்ய தேனை தானம் செய்தால் குழந்தை இல்லாதவர்களுக்கு குழந்தை பிறக்கும்.