மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
உங்கள் வீட்டில் செல்வம் சேர வேண்டுமா? இதனை மறக்காமல் கடைப்பிடியுங்கள்!
பொதுவாக வீட்டில் எவ்வளவு தான் சம்பாதித்தாலும் ஒரு ரூபாய் கூட நிற்பதில்லை என பலரும் புலம்புவதை நாம் பார்த்திருக்கிறோம். அதற்கு ஆன்மீக ரீதியில் பல காரணங்கள் உண்டு. எனவே செல்வம் நிலைத்து நிற்க என்ன செய்யலாம் என்பது குறித்து இந்த பதிவில் நாம் தெரிந்து கொள்ளலாம்.
பொதுவாக நம்முடைய வீட்டில் செல்வம் தங்க வேண்டும் என்றால் இரண்டு விஷயங்களை நாள்தோறும் கடைபிடிக்க வேண்டும். அதன்படி, காலையில் எழுந்தவுடன் குளித்துவிட்டு பூஜை செய்ய வேண்டும். அதேபோல் மாலையிலும் மறக்காமல் பூஜை செய்ய வேண்டும்.
குறிப்பாக பூஜை அறையை எப்போதும் சுத்தமாக வைத்திருக்க வேண்டும். முக்கியமாக மகாலட்சுமி தாயார் மற்றும் குபேரருக்கு பூஜை செய்து வணங்கினால் செல்வம் சேர்ந்து கொண்டே இருக்கும் என்பது நம்பிக்கை.
இவ்வாறு தினந்தோறும் செய்தால் மகாலட்சுமி தாயார் நம்முடைய வீட்டில் நிரந்தரமாக தங்கி விடுவார் என்பது நம்பிக்கை. எனவே நம் வீட்டை விட்டு செல்வம் வெளியே செல்லாது. நாமும் மகிழ்ச்சியாக வாழலாம்.
அதேபோல் கடவுளுக்கு பூஜை செய்ய பயன்படுத்தும் பாத்திரங்களை ஒருநாள் முன்னரே சுத்தம் செய்து வைக்க வேண்டும். வெள்ளிக்கிழமை சுத்தம் செய்யக்கூடாது.