ஆண்டு முழுவதும் தண்ணீரில் மூழ்கி இருக்கும் அதிசய கோயில்.! தமிழ்நாட்டில் எங்கு உள்ளது தெரியுமா.!?



News about kanchipuram temple

சஞ்சீவி ராயர் ஆஞ்சநேயர் கோயில்

பொதுவாக கோயில்கள் என்றாலே பல மர்மங்களையும், அதிசயங்களையும் உள்ளடக்கியதாகவே இருந்து வருகிறது. குறிப்பாக தமிழ்நாட்டில் உள்ள பல கோயில்கள் நம் மன்னர்களின் சாம்ராஜ்யங்களையும், அவர்கள் எவ்வாறு தமிழ்நாட்டை ஆண்டார்கள் என்பதை விவரிக்கும் முறையையும் கோயில்கள் உள்ளடக்கி உள்ளது. அந்த வகையில் காஞ்சிபுரம் மாவட்டம் அய்யங்கார் குளம் என்ற பகுதியில் உள்ள அதிசய கோயிலை குறித்து இப்பதிவில் விளக்கமாக பார்க்கலாம்.

temple

தமிழ்நாட்டில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் அய்யங்கார் குளம் என்ற பகுதி உள்ளது. அப்பகுதியில் கிருஷ்ணதேவராயர் மன்னர் ஆண்ட காலத்தில் கட்டப்பட்ட பழமையான ஆஞ்சநேயர் கோயில் ஒன்று உள்ளது. சஞ்சீவிராயர் ஆஞ்சநேயர் திருக்கோயில் என்று அழைக்கப்படும் இக்கோயிலில் முன்பக்க நுழைவாயில் நீண்டு வளர்ந்த தூண்களுடன் காட்சி தருகிறது.

இதையும் படிங்க: நிறம் மாறும் கருவறை மண்.! மணலை பிரசாதமாக தரும் மர்ம கோயில்.? தமிழ்நாட்டில் எங்கு உள்ளது தெரியுமா.!?

நீருக்கடியில் மூழ்கி இருக்கும் கோயில்

இக்கோயிலின் முன்னால் அழகிய பச்சை  பசேல் என்று குளம் ஒன்று உள்ளது. இக்குளத்தின் கரையில் வடக்கு பகுதியில் வாவிகிணறு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. படிகளுடன் அமைக்கப்பட்ட இந்த கிணற்றின் உள் அழகிய சிற்ப வேலைப்பாடுகள் கொண்ட 16 கால் மண்டபம் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் பெருமாள் சிலை அமைக்கப்பட்டு பெருமாள் கோயிலாக இக்கோயிலை வழிபட்டு வருகின்றனர்.

temple

ஆண்டுக்கு

ஒருமுறை மட்டுமே வழிபாடு

 

வருடம் முழுவதும் கிணற்றில் பெருக்கெடுத்து ஓடும் ஊற்று ஒன்று உள்ளதால் இக்கோயில் எப்போதும் தண்ணீரால் நிரம்பப்பட்டு இருக்கிறது. சித்ரா பௌர்ணமி வழிபாட்டிற்காக மட்டுமே கிணற்றினுள் இருக்கும் தண்ணீரை வெளியேற்றுவார்கள். அன்று மட்டுமே இக்கோயிலினுள் சென்று கடவுளை தரிசிக்க இயலும். இதனை காண்பதற்காகவே லட்சக்கணக்கான மக்கள் சித்ரா பௌர்ணமி நாளன்று இக்கோவிலுக்கு செல்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: முன்ஜென்ம பாவங்களைப் போக்கி நன்மையை தரும் எறும்பீஸ்வரர் கோயில்.! எங்கு உள்ளது தெரியுமா.!?