மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
இந்த பிரச்சனை உள்ளவர்கள் வீட்டில் விளக்கு ஏற்றக்கூடாது.. என்னென்ன காரணம் என்பதை தெரிந்துகொள்ளுங்கள்..!!
வீடுகளில் தினமும் விளக்கு ஏற்றுவது நல்லது என்று நமது முன்னோர்கள் கூறுவார்கள். இருப்பினும் சில நாட்களில் விளக்கு ஏற்றக்கூடாது என்ற நிபந்தனையும் உள்ளது. சிலருக்கு இந்த விஷயம் தெரிந்திருந்தாலும் பலருக்கும் தெரியாது. அவை குறித்து தற்போது நாம் தெரிந்து கொள்ளலாம்.
ஒரு துக்க நிகழ்வு நடந்துவிடும் பட்சத்தில் தங்களது வீட்டில் காரியம் முடியும் வரையில் விளக்கு என்பது ஏற்றக்கூடாது. இதனை இழப்பு தீட்டு என்று கூறுவார்கள். வீட்டை சுத்தம் செய்து பூஜை அறை சாமான்களையும் சுத்தம் செய்து தலைக்கு குளித்து விளக்கேற்றலாம்.
பங்காளிகளின் வீட்டில் குழந்தை பிறந்திருக்கிறது என்றால் புண்ணியாதானம் செய்யும் வரை தங்களது வீட்டில் பிறகு ஏற்றக்கூடாது. வழிபாடுகளும் நடத்தகூடாது. சில வீடுகளில் 7 நாட்கள், 10-வது நாள் என்ற முறையில் புண்ணியாதானம் செய்து வீட்டில் விளக்கு ஏற்றலாம்.
வீட்டில் விளக்கை ஏற்றும் போது வீட்டையும், பூஜை அறையையும் சுத்தம் செய்வது நல்லது. பித்தளை பாத்திரத்தில் சிறிதளவு மஞ்சள் பொடி, கோமியம், தண்ணீர் ஆகியவற்றை சேர்த்து மாவிலை மூலமாக அந்த நீரை வீடு முழுவதும் தெளித்துவிடலாம்.