குஷ்புவிடம் வாய்ப்பு கேட்ட ஹீரோ.. செருப்பால அடிப்பேன் என திட்டிய நடிகை.!
தேவர்கள் வரமருளும்.. விடியற்காலை பிரம்மமுகூர்த்தம்.. இவ்வளவு விஷயங்கள் இருக்கிறதா.?!
நினைத்த காரியங்களை வெற்றிகரமாக முடிக்க லட்சுமி கடாட்சம் நிறைந்த பிரம்ம முகூர்த்தத்தை பயன்படுத்தி நாம் எந்த காரியத்தில் ஈடுபட்டாலும் அது நிச்சயம் முழுமையடையும். பிரம்ம முகூர்த்தத்தில் தோஷங்கள் எதுவும் இல்லை. எனவே, இந்த நேரத்தில் எழுந்து, ஸ்னானம் செய்துவிட்டு சுப காரியத்திற்கான வேலையை தொடங்கினால், அந்த காரியம் நிச்சயம் வெற்றியாக அமையும். அது மட்டும் அல்லாமல் வீட்டில் பிரம்ம முகூர்த்த நேரத்தில் விளக்கேற்றி வழிபடுவது நமக்கு பொன், பொருள் சேர்க்கை யோகத்தை ஏற்படுத்தும்.
இதனால் தான் வீடு கிரகப்பிரவேசம் செய்வது மற்றும் திருமணம் செய்வது உள்ளிட்டவை பிரம்ம முகூர்த்தத்தில் அரங்கேற்றப்படுகிறது. பிரம்ம முகூர்த்தத்தில் மகாலட்சுமி, சிவன் பார்வதி மற்றும் முப்பத்து முக்கோடி தேவர்களும் வானமண்டலத்தில் சஞ்சரிப்பதாக கூறப்படுகிறது. எனவே, இந்த நேரத்தில் தூங்காமல் வழிபாடு செய்வது பல மடங்கு புண்ணியத்தை நமக்கு ஏற்படுத்தும். அதிகாலையில் எழுவதால் நாம் உடல் சுறுசுறுப்புடன் இருப்பதால் நல்ல ஆரோக்கியம் கிடைக்கும்.
அந்த நேரத்தில் எழுந்து தியானம் செய்து கொண்டு சூரியன் உதிக்கும் நேரத்தில் சூரிய வழிபாடு செய்வது நமது எண்ணங்களில் இருந்து எதிர்மறை ஆற்றலை குறைக்கிறது இதனால் மனம் உற்சாகத்துடன் இருப்பதுடன் ஞாபக சக்தியும் அதிகரிக்கும். எனவே, தான் அதிகாலை நேரத்தில் படிப்பது சிறந்ததாக கருதப்படுகிறது. ஒரு விஷயம் ஆரம்பிக்கும்போது சரியான நேரத்தில் ஆரம்பித்தால் அது முடியும்போது சுபமாக இருக்கும் என்பது முன்னோர்களின் நம்பிக்கை. எனவே பிரம்ம முகூர்த்தத்தில் நாம் ஒரு செயலை ஆரம்பித்தால் அது நிச்சயம் சுகமாக முடியும்.