செல்வம் செழிக்க.. மகிழ்ச்சி நிலைக்க.. ஆடி மாத பௌர்ணமியில் என்ன செய்யலாம்?.! தவற விடாதீங்க.!!



Sathyanarayana pooja tips

 

மாதத்திற்கு ஒரு முறை வரும் பௌர்ணமியில் ஆடி மாத பௌர்ணமி மக்களால் பெரிய அளவில் வரவேற்கப்படுகிறது. ஆடி பௌர்ணமி அன்று அம்பிகை மற்றும் தங்களின் இஷ்ட தெய்வங்களுக்கு பூஜைகள், வழிபாடுகள் செய்வது சிறந்த பலன்களை தரும்.

பெரும்பாலானோர் தங்களின் வீடுகளில் சத்திய நாராயண பூஜையை மேற்கொள்வார். இன்றைய தினத்தில் விளக்கேற்றி வழிபடுவது குடும்பத்தில் அமைதியை நிலைக்கச் செய்யும். புண்ணியமும் கிட்டும். ஆடி பௌர்ணமி தினத்தன்று அதிகாலை எழுந்து குளித்து காலை முதல் மாலை வரை உணவு உண்ணாமல் விரதம் இருந்தால் தெய்வத்தின் பரிபூரண ஆசிகள் கிடைக்கும். 

Latest news

மேலும் ஆடி பௌர்ணமி வழிபாட்டின் மூலமாக எடுத்த காரியம் அனைத்திலும் வெற்றி பெற இயலும். ஆகஸ்ட் 1-ஆம் தேதியான இன்று பௌர்ணமியும், திருவோணமும் ஒரே நாளில் வருவதால் விரதம் இருந்து சத்திய நாராயண பூஜை செய்வது வாழ்க்கையில் பல வெற்றிகளை குவிக்க உதவும்.

சத்யநாராயண பூஜை என்பது காக்கும் கடவுளான விஷ்ணு பகவானுக்கு நடத்தப்படும் பூஜையாகும். பெருமாள் எடுத்த பல அவதாரங்களில் சத்யநாராயணர் அவதாரமும் ஒன்று. அவருக்கு நடத்தப்படும் பூஜை மிகவும் புனிதமாக கருதப்படுகிறது. இந்த பூஜை திருமணம், வீடு, நிலம் வாங்கும் போதும், முக்கிய திருவிழாக்களின் போதும் நடத்தப்படுகிறது. 

எந்த ஒரு காரியத்திலும் வெற்றி கிடைக்க சத்திய நாராயணரை மனதில் பிரார்த்தித்து பூஜையை செய்ய வேண்டும். ஒவ்வொரு மாதமும் பௌர்ணமியன்று மாலை சந்திரன் உதயமாகும் நேரத்தில் சத்தியநாராயண பூஜை செய்வது நல்லது. பௌர்ணமி மற்றும் மகர சங்கராந்தி அன்று பூஜை நடத்த உகந்த நாட்களாகும்.

Latest news

பூஜை செய்யும் முறை :

விநாயகர் பூஜை, நவகிரக பூஜையை முதலில் செய்து அதன் பிறகு சத்யநாராயண பூஜை செய்ய வேண்டும். கணவன் - மனைவி இருவரும் பௌர்ணமியன்று சந்திரன் உதயமாகும் நேரத்தில் பூஜை செய்ய தொடங்கலாம். பின் தூபம், தீபம், நிவேதனம், கற்பூர தீபம் முதலியவற்றை காண்பித்து பூஜையை நிறைவு செய்ய வேண்டும்.

ஒவ்வொரு மாதமும் பௌர்ணமியன்று இந்த விரதத்தை கடைப்பிடித்தால் அனைத்து துன்பங்களில் இருந்தும் நீங்கலாம். இதன் மூலமாக செல்வம், கௌரவம், புகழ், அந்தஸ்து, புத்திர பாக்கியம், திருமனயோகம் உள்ளிட்ட அனைத்தையும் பெறலாம். 

தவறாமல் ஒவ்வொரு பௌர்ணமியன்றும் நம்பிக்கையுடன் சத்யநாராயண பூஜை செய்வதால் வீட்டில் மகிழ்ச்சி நிலைக்கும். இந்த பூஜையின் மூலம் பகவானின் அருளையும் பூரணமாக பெறலாம். ஏழ்மை விலகி செல்வம் சேரும். பயம் நீங்கும். பக்தர்கள் விரும்பிய அனைத்து கோரிக்கைகளும் விரைவில் நிறைவேறும்.