இன்றைய சிவராத்திரி தினத்தன்று விரதம் இருப்பவர்களுக்கு என்ன பலன்கள் கிடைக்கும்?
மகா சிவராத்திரி விழாவை முன்னிட்டு இன்று நாடு முழுவதும் உள்ள சிவாலயங்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்று வருகின்றன.
சிவராத்திரி தினத்தன்று விரதம் இருக்கும் பக்தர்கள், இரவு முழுவதும் விழித்திருந்து ஓம் நமச்சிவாய என சிவபெருமானின் திருநாமத்தை ஜபித்து, தேவாரம், திருவாசகம் பாடல்களை பாடியும், சிவனுக்கு பூஜைசெய்து வழிபட்டால் பக்தர்கள் நினைத்த காரியம் கைகூடும்.
சிவராத்திரி மிகவும் பழமையான இந்து பண்டிகைகளில் ஒன்றாகும். சிவராத்திரி தினத்தன்று பக்தர்கள் கோயிலுக்கு வந்து சிவலிங்கத்தை பலவிதமான பூக்கள், பழங்கள், பிரசாத ஆகியவற்றுடன் வணங்குகிறார்கள். மேலும், சிவலிங்கத்தை பால் கொண்டு மகா அபிஷேகம் செய்கிறார்கள்.
மகாசிவராத்திரி தினத்தில் விரதம், வழிபாடு, அபிஷேகம், ஆராதனை, அலங்காரங்கள் செய்ய வேண்டும் என்பது மிக முக்கிய விஷயம் ஆகும். மகாசிவராத்திரியில் விரத வழிபாடு நம் முன் வினைகள், ஜென்ம பாவங்கள் நீக்கி நல்லருள் கிடைக்கச் செய்யும்.