மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
#ஆன்மிகம்: நாம் தானம் செய்வதில் இவ்வுளவு விஷயம் உள்ளதா?.. மக்களே மறந்தும் இவையெல்லாம் செஞ்சிடாதீங்க.!
தானம் என்பது இன்றைய காலத்தில் சாதாரணமாகிவிட்டது. அதனால் தானம் வரைமுறை இன்றியும் போய்விட்டது. அன்றைய நாட்களில் சுபகாரியங்கள் நடக்கும் நேரந்தில் கொடுக்க வேண்டிய தானம், அசுபகாரியம் நடைபெறும் நாட்களில் கொடுக்க வேண்டிய தாங்கள் என இரண்டு வகையாக பிரித்து இருந்தார்கள்.
தான விவகாரத்தில் எப்படி இருக்க வேண்டும், தவறான தானத்தினால் பாவம் சேருமா? என்ற விபரங்கள் குறித்து இன்று தெரிந்துகொள்ளலாம்.
முறை தவறிய தானம் என்பது பசு மாட்டை வாங்கி தானமாக கொடுக்கிறோம் என்றால், யாரின் கைகளில் தானம் கொடுக்க வேண்டும் என்பதை தெளிவாக சிந்திக்க வேண்டும். பசுவை வளர்க்க தெரியாத நபர்களுக்கு தானமாக வழங்கினால், அவர் வேறொருவருக்கு மாட்டை விற்பனை செய்வார்கள். இதனால் பசு விற்பனை செய்பவரிடம் இருந்து பசுவுக்கு ஏதேனும் தீங்கு நேரலாம். அப்படி தீங்கு நேர்ந்தால் அதன் பாவம் நம்மையே சாரும்.
பாத்திரம் அறிந்து பிச்சை போடா வேண்டும் என்று கூறுவது, நாம் தானம் வழங்கினால் தானத்தின் பலனை அனைவரும் பெற வேண்டும். இதனால் நமது பாவங்கள், கர்ம வினைகள் குறையும். தானத்துடன் நமது கடமை என்பது முடிந்துவிடப்போவது இல்லை. கொடுத்த தானம் சரியான இடத்தில் இருக்கிறதா? என்பதை சோதிக்க வேண்டும்.
பெண்ணை திருமணத்திற்கு பின்னர் கன்னிகா தானம் செய்து கொடுத்தபின், பெண்ணின் நன்மை - தீமையை பார்க்க வேண்டும். முறையான தானமும் இப்படியே இருக்க வேண்டும். அதேபோல், நமக்கு உபயோகம் இல்லாத பொருட்களை பிறருக்கு தனமாக வழங்குகிறோம். நமது உடையை தானமாக கொடுக்கும் போது, நன்கு சுத்தம் செய்து மஞ்சள் வைத்து கொடுக்க வேண்டும்.
நாம் உடுத்திய உடையை துவைக்காமல் அல்லது கிழிந்த துணிகளை தானம் செய்யும் பட்சத்தில், அதனால் பாவமே வரும். புதிதாக வாங்கப்பட்ட குடை, கம்பளி, ஆடை, செருப்பு, பருப்பு, எண்ணெய், அரிசி, பாய் போன்றவற்றை தானமாக கொடுக்கலாம். நாம் கொடுக்கும் தானம் பிறருக்கு பயன் உள்ளதாய் அமைய வேண்டும். அதேபோல பிரதிபலனை எதிர்பார்க்காமல் தானம் செய்ய வேண்டும்.