#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
பிரம்ம முகூர்த்தம்.. அவ்வளவு விசேஷமாக கருதப்படுவது இதனால் தானா.?!
நாள்தோறும் அதிகாலை 3 மணி முதல் 5.30 மணி வரையிலான காலத்தை பிரம்ம முகூர்த்த நேரம் என்று கூறுகின்றோம். இந்த நேரத்தில் அனைத்து விதமான சுப காரியங்களும் செய்யலாம். பிரம்ம முகூர்த்த காலத்தில் படிப்பு, தியானம், வழிபாடு என்று எந்த செயலை செய்தாலும் அதற்கான முழுமையான பலனும் நம்மை வந்து சேரும் என்பது ஐதீகமாக இருக்கிறது.
படைத்தால், காத்தல், அழித்தல் என 3 தொழில்களையும் செய்யும் பிரம்மா, விஷ்ணு, சிவன் உள்ளிட்டோரை மும்மூர்த்திகள் என்று அழைக்கிறோம்., இவர்களில் சிவன் வழிபாடும் விஷ்ணுவின் வழிபாடும் உலகம் முழுவதும் செழித்திருந்தாலும், சுப காரியம் செய்வதற்கான சரியான நேரத்தை மட்டும் பிரம்ம முகூர்த்தம் என்று அழைக்கின்றோம்.
பூலோகத்தைப் பொறுத்த வரையில், பிரம்மாவிற்கு தனியாக வழிபாடில்லை. ஆனாலும் சுப காரியங்கள் செய்ய மிக சிறப்பான நேரத்தை பிரம்ம முகூர்த்தம் என்று நாம் சொல்கின்றோம். அதே நேரம், விஷ்ணு குறித்தோ, சிவன் குறித்தோ முகூர்த்த நேரமாக எதுவும் கருதப்படவில்லை.
நல்லநேரம், முகூர்த்த நேரம் என்று ஒவ்வொரு தினமும் ஒவ்வொரு நேரத்தையும் நாம் குறிப்பிட்டிருக்கிறோம். ஆனாலும் அதிகாலை நேரத்தை மட்டுமே பிரம்ம முகூர்த்தம் என்று சொல்கின்றோம்.
இப்படி சொல்வதற்கு அறிவியல் ரீதியாக பல்வேறு காரணங்கள் இருக்கின்றன. அதாவது, அதிகாலை 3 மணி முதல் 5.30 மணி வரை காலகட்டத்தில் சந்திரனின் குளுமையோ அல்லது சூரியனின் வெப்பமோ முழுமையாக யாரையும் ஆட்கொள்ளாது. இப்படியான சமநிலையான காலத்தை தான் நாம் பிரம்ம முகூர்த்தம் என்று கூறுகின்றோம்.
இந்த நேரத்தில், நம்முடைய உடல் இயக்கம் சீராக காணப்படும். பதற்றம் எதுவும் இல்லாததால், மனதில் அமைதியான சூழ்நிலையை ஏற்படுத்தும். நம்முடைய மனதின் இயக்கத்தையும், உடலின் இயக்கத்தையும் சீராக வைக்க உதவுகிறது.மேலும் நம்மை சுறுசுறுப்பாகவும், ஆரோக்கியமாகவும் இது வைத்திருக்கும் என்று கூறப்படுகிறது.
நாள்தோறும் நாம் இரவில் உறங்கும்போது நித்திரையுலகத்திற்கு சென்று விடுகிறோம். இதன் காரணமாக, தினமும் காலையில் கண்விழிப்பதை புதிதாக பிறப்பதற்கு சமம் என்று தெரிவிக்கிறார்கள். நாள்தோறும் பிரம்மாவால் உலக உயிர்கள் சிருஷ்டி ஆரம்பிக்கும் நேரம் என்பதன் காரணமாக, இதனை பிரம்ம முகூர்த்தம் என்று குறிப்பிடுகிறார்கள்.
நாள்தோறும் இரவில் உறங்கி, மறுநாள் காலை கண் விழிப்பதே இறைவன் நமக்கு கொடுத்த வரம் என்று கூறப்படுவதால், நன்றியோடு அவரை நினைத்துப் பார்ப்பதற்காகவே அதிகாலை நேரத்தை பிரம்மாவிற்கு உரிய முகூர்த்தம் எனவும், வழிபாட்டிற்கான நேரம் என்றும் நம்முடைய முன்னோர்கள் தெரிவித்து சென்றுள்ளனர்.