வாரத்தின் முதல் நாள் ஏன் ஞாயிற்று கிழமையில் வருது தெரியுமா.?!



why sunday is week first

சூரியனின் இயக்கத்தைக் கொண்டுதான் உலகமே இயங்குகிறது. சூரிய உதயத்திற்கு முன் அனைத்து உயிரினங்களும் கண்விழித்து அன்றாட கடமைகளை செய்கின்றன. சூரியனுக்கு பிறகு தான் மற்ற கடவுள்கள் என்று புராணங்களும் தெரிவிக்கின்றன. 

காலையில் எழுந்தவுடன் சூரிய நமஸ்காரம் செய்வது முதன்மையானதாக கருதப்படுகிறது. பலவற்றும் ஞாயிறை மையமாகக் கொண்டுதான் ஆரம்பிக்கிறது. உலகத்தில் ஜோதியின் வடிவமாக சூரியன் இருப்பதாக யஜுர் வேதம் தெரிவிக்கின்றது. இதன் அடிப்படையில் தான் ஞாயிற்றுக்கிழமை வாரத்தின் முதல் நாளாக இருக்கிறது.

Sunday

சூரிய நமஸ்காரம்

சூரியன் தான் மிகப்பெரிய நட்சத்திரம். இந்த பிரபஞ்சத்திற்கே ஆற்றலை தரக்கூடியது சூரியன்தான். சூரிய பகவானை வழிபட்டால் நல்ல ஆற்றல் கிடைக்கும். காலையில் எழுந்து சூரிய உதயத்திற்கு முன் பிரம்ம முகூர்த்தத்தில் குளித்துவிட்டு சூரியன் வருகையில் அதனை வழிபட வேண்டும். 

சூரியன் உதிக்கும் திசை நோக்கி நின்று ஒரு சொம்பில் தண்ணீரை வைத்து சூரிய பகவானை நோக்கி வழிபட்டுக் கொண்டே அந்த தண்ணீரை ஒரு தட்டில் ஊற்ற வேண்டும். இது முடிந்தவுடன் ஏதாவது ஒரு இனிப்பை சாப்பிடலாம். 

பலன்கள்

இதுபோல அன்றாடம் நாம் செய்வதால் நமக்கு நோய் நொடிகள் ஏற்படாது. உடல் ஆரோக்கியம் மேம்படும். முகம் மற்றும் தேகத்தில் வசீகரம் ஏற்படும். சமூகத்தில் பிறர் மதிக்கும் நிலைமைக்கு செல்வோம். 

குடும்ப பொருளாதாரம் நன்கு வளர்ச்சி அடையும். செய்வினை போன்ற பல்வேறு மாந்திரீக சித்து வேலைகள் இருந்தாலும் அவை நம்மை அண்டாது.