சாணக்கிய நீதிபடி இந்த குணங்களைக் கொண்ட ஆண்களை தான் பெண்களுக்கு ரொம்ப பிடிக்கும் தெரியுமா.!?



Womens likes when mens are having theses characters

பொதுவாக சாணக்கியரின் வார்த்தைகள் அந்த காலத்தில் இருந்து தற்போதுள்ள நவீன காலம் வரை எல்லா காலகட்டத்திற்கும் பொருத்தமானதாகவும், ஏற்றுக்கொள்ளும் விதமாகவும் உள்ளது. நம் வாழ்க்கையில் சாணக்கிய நீதியை பின்பற்றி வாழ்ந்து வந்தால் பல பிரச்சினைகளில் இருந்து நம்மை காப்பாற்றும் என்று கூறப்பட்டுள்ளது. சாணக்கிய நீதி மனித வாழ்வில் பின்பற்ற வேண்டிய ஒழுக்கம், காதல், நல்லது கெட்டது என அனைத்தையும் கூறியுள்ளது.

மேலும் சாணக்கியரின் நீதிபடி நம் வாழ்க்கையை வாழ்வதால் மரியாதையையும், மகிழ்ச்சியும் அதிகரிக்க செய்கிறது. நம் வாழ்க்கையை மகிழ்ச்சியாக மாற்ற சாணக்கியரின் நீதிபடி ஒரு சில வழிகளை பின்பற்றுவதன் மூலம் எளிதாக மாற்றலாம். இதன்படி காதல் வாழ்க்கையிலோ அல்லது திருமண வாழ்க்கையிலோ ஆண்கள் இந்த குணங்களை கொண்டிருந்தால் பெண்களுக்கு மிகவும் பிடித்தமான ஆண்களாக இருக்கலாம் என்று சாணக்கிய நீதிபடி கூறப்பட்டுள்ளது. இது குறித்து பதிவில் விளக்கமாக பார்க்கலாம்.

astrology

சாணக்கியர் நீதிபதி ஆண்கள் இடம் இருக்க வேண்டிய முக்கிய குணங்கள்

1

. மரியாதை - பொதுவாக காதல் உறவிலோ அல்லது திருமண உறவிலோ தன்னை மதிக்கும் ஆண்களை பெண்களுக்கு மிகவும் பிடிக்கும். அத்தகைய ஆண்களே தங்களது வாழ்க்கை துணையாக இருக்க வேண்டும் என்று பெண்கள் பலரும் விருப்பப்படுகிறார்கள்.2. நேர்மை - ஒரு நேர்மையான ஆண் எப்போதும் தவறான பாதையில் செல்ல மாட்டார். எனவே நேர்மையான ஆண்களையே தங்கள் வாழ்க்கை துணையாக இருப்பதற்கு பெண்கள் தேர்ந்தெடுக்கின்றனர்.
3. கண்ணியம் - ஆணவம் இல்லாத ஆண்கள் மற்றும் தங்களுடைய தவறுகளை ஒத்துக்கொள்ளும் ஆண்களை பெண்களுக்கு மிகவும் பிடிக்கும். சாணக்கிய நீதிபதி இத்தகைய ஆண்கள், பெண்களை எளிதாக கவருகின்றதாக கூறப்பட்டுள்ளது.
4. நன்னடத்தை - சாணக்கிய நீதிபதி மென்மையான மற்றும் நன்னடத்தையை கொண்டுள்ள ஆண்களை பெண்களுக்கு மிகவும் பிடிக்கும்.
5. தைரியம் - பொதுவாக பெண்கள் தங்கள் வாழ்க்கை துணையை தேர்ந்தெடுப்பதில் மிகவும் கவனமுடன் இருப்பார்கள். தன் வாழ்க்கை துணை வாழ்நாள் முழுவதும் தன்னை பாதுகாப்பாரா என்பதில் தெளிவுடன் இருப்பார்கள். இதன்படி தைரியமான ஆண்களை பெண்களுக்கு மிகவும் பிடிக்கும்.

இதையும் படிங்க: காலில் கருப்பு கயிறு கட்டுபவராக நீங்கள்.? இந்த விஷயங்களை கண்டிப்பாக தெரிஞ்சுக்கோங்க.!?

இதையும் படிங்க: வருடத்திற்கு 10 நாட்கள் மட்டுமே திறந்திருக்கும் மர்ம கோயில்.! எங்குள்ளது தெரியுமா.!?