காலில் கருப்பு கயிறு கட்டுபவராக நீங்கள்.? இந்த விஷயங்களை கண்டிப்பாக தெரிஞ்சுக்கோங்க.!?



News about astrology beliefs

காலில் கருப்பு கயிறு அணிவதற்கான காரணம்

பொதுவாக தற்போதுள்ள காலகட்டத்தில் பலரும் காலில் கருப்பு கயிறு கட்டி கொள்கின்றனர். நம் முந்தைய காலகட்டத்தில் பெற்றோர்கள் குழந்தைகளுக்கு கழுத்து மற்றும் கையில் கருப்பு கயிறை திருஷ்டி கழிப்பதற்காக கட்டினார்கள். ஆனால் தற்போது காலில் கருப்பு கயிறு ஏன் கட்டுகிறோம், யார் யார் கட்டக் கூடாது என்று கூட தெரியாமல் பலரும் கருப்பு கயிறை அழகுக்காக கட்டுகின்றனர்.

astrology

கருப்பு கயிறு கட்டுவதற்கான ஜோதிட சாஸ்திர விதிமுறைகள்

கருப்பு கயிறை யார் கட்டக்கூடாது? எந்த ராசிக்காரர்கள் கருப்பு கயிறை கட்டலாம்? கருப்பு கயிறை எவ்வாறு கட்டலாம்? என்பதற்கெல்லாம் ஜோதிட சாஸ்திரத்தின் படி ஒரு சில விதிமுறைகள் உள்ளன. இதன்படி கருப்பு கயிறு காலில் கட்டும் போது அதற்குரிய பலன்கள் கிடைக்கும். தற்போது கருப்பு கயிறை கட்டுவதற்கான விதிமுறைகளை குறித்து இப்பதிவில் விளக்கமாக பார்க்கலாம்?

இதையும் படிங்க: வருடத்திற்கு 10 நாட்கள் மட்டுமே திறந்திருக்கும் மர்ம கோயில்.! எங்குள்ளது தெரியுமா.!?

கருப்பு கயிறை யார் யார் கட்டக் கூடாது?
செவ்வாய்க் கிரகத்தால் ஆளப்படுபவர்களான மேஷம் மற்றும் விருச்சிக ராசியினர் கருப்பு கயிறை கண்டிப்பாக கட்டக் கூடாது. மீறி கட்டினால் மனக்குழப்பத்திற்கு உள்ளாக நேரிடும். உடலிலும் நோய் பாதிப்புகள் தொடர்ந்து வந்து கொண்டே இருக்கும். எனவே செவ்வாய் கிரகத்தால் ஆளப்படும் ராசியினர்கள் கருப்பு கயிறு மட்டுமின்றி, கருப்பு நிற உடையையும் அணியாமல் இருப்பது நல்லது.

astrology

கருப்பு

கயிறு அணிந்து கொள்ளும் வழிமுறைகள்

கருப்பு கயிறை அணிவதற்கு முன்பாக மஞ்சள் அல்லது சிவப்பு நிற கயிறு அணிந்து இருந்தால் அதை கழற்றி விட வேண்டும். ஒரே நேரத்தில் இரண்டையும் கட்டியிருக்க கூடாது. குறிப்பாக பிரம்ம முகூர்த்த நேரத்தில் ருத்ர காயத்ரி மந்திரத்தை கூறிவிட்டு கருப்பு கயிறு கட்டுவது நல்ல பலனை கொடுக்கும்.

இதையும் படிங்க: 150 ஆண்டுகளுக்கு மேலாக கோயிலை பாதுகாக்கும் அதிசய முதலை.! இக்கோயில் எங்கு உள்ளது தெரியுமா.!?