காந்தாரா 2 திரைப்படம் ரிலீஸ் தேதி அதிகாரப்பூர்வ அறிவிப்பு; கொண்டாட்டத்தில் ரசிகர்கள்.!
வருடத்திற்கு 10 நாட்கள் மட்டுமே திறந்திருக்கும் மர்ம கோயில்.! எங்குள்ளது தெரியுமா.!?
கர்நாடக மாநிலத்தில் ஹாசன் என்ற பகுதி அமைந்துள்ளது. இப்பகுதியில் ஹாசனம்பா கோயில் மிகவும் பிரசித்தி பெற்றதாக கருதப்பட்டு வருகிறது. இக்கோயிலில் அமைந்துள்ள ஹாசனாம்பா தேவியை தரிசிக்க தினமும் நூற்றுக்கணக்கில் பக்தர்கள் படையெடுத்து வருகின்றனர். ஹாசனம்பா கோயில் அமைந்துள்ளதால் தான் இப்பகுதிக்கும் ஹாசன் என்று பெயர் வந்தது.
ஹாசனாம்பா கோயிலின் சிறப்புகள்
ஒரு வருடத்திற்கு பத்து நாட்கள் மட்டுமே இக்கோயிலின் நடை திறந்திருக்கும். அதாவது பத்து நாட்கள் முழுவதுமாக இரவு, பகல் என்று நடை திறக்கப்பட்டு ஹாசனம்பா தேவிக்கு பூஜை செய்யப்படுகிறது. சுமார் 12 ஆம் நூற்றாண்டில் கிர்னப்பா நாயக்கர் பாளையத்தில் ஹாசனம்பா தேவிக்கு கோயில் எழுப்பப்பட்டது.
இதையும் படிங்க: 150 ஆண்டுகளுக்கு மேலாக கோயிலை பாதுகாக்கும் அதிசய முதலை.! இக்கோயில் எங்கு உள்ளது தெரியுமா.!?
எரிந்து கொண்டே இருக்கும் விளக்கு
ஹாசனாம்பா கோயில் ஒவ்வொரு வருடமும் 10 நாட்கள் திறக்கப்பட்டு பலிபட்யாமி என்ற நாளில் மூடப்படுகிறது. அன்றைய நாளில் ஹாசனாம்பா தேவிக்கு விளக்கு ஏற்றப்படும். அந்த விளக்கு அடுத்த வருடம் கோயில் திறக்கப்படும் நாள் வரை எரிந்து கொண்டே இருக்கிறது என்பது இக்கோயிலின் சிறப்பான விஷயமாக கருதப்பட்டு வருகிறது.
அதிசய கோயில்
மேலும் இக்கோயில் மூடப்படும் நாளன்று அம்மனுக்கு பூஜை செய்யப்படும் மாலைகள், பூக்கள் அனைத்தும் அடுத்த வருடம் வரை காய்ந்து போகாமல் அப்படியே இருக்குமாம். எனவே இக்கோயிலின் சிறப்பை காண்பதற்காகவே ஒவ்வொரு வருடமும் பக்தர்கள் இக்கோயிலுக்கு அம்மனை கான படையெடுத்து வருகின்றனர்.
இதையும் படிங்க: கோயில் குளத்தில் மிதந்து வரும் திருநீர்.. இந்த அதிசய கோயில் எங்குள்ளது தெரியுமா.!?