மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் சென்னை பள்ளிக்கரனையில் அதிரடியாக அகற்றிய 100 கடைகள்.!
சென்னை பள்ளிக்கரணை பகுதியில் வேளச்சேரி பிரதான சாலையை ஒட்டி பலர் கடைகளை நடத்தி வருகின்றனர். இதனால் சாலையோரத்தில் வாகனங்களை நிறுத்துவதில் சிரமம் ஏற்பட்டு வந்ததாக சொல்லப்படுகிறது.
மேலும் இதனால் வாகனங்கள் சாலையிலேயே நிறுத்தப்பட்டு வருவதால் அங்கு தொடர் விபத்துக்கள் ஏற்பட்டு வருவதாகவும் புகார்கள் வந்துள்ளது. இந்நிலையில் பொதுமக்களின் புகார்களை கருத்தில் கொண்டு சாலை ஓரங்களில் உள்ள இடத்தை ஆக்கிரமித்து அமைக்கப்பட்டிருந்த 100-க்கும் மேற்பட்ட கடைகள் அகற்றப்பட்டுள்ளது.
இதனையடுத்து நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் கடைகளை அகற்றியதால் இனி வரும் நாட்களில் அந்த பகுதியில் பொதுமக்களுக்கும், அவ்வழி செல்லும் வாகன ஓட்டிகளுக்கும் இடையூறு இருக்காது என்று எதிர்பார்க்கப்படுகிறது.