மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
பொதுமக்களுக்கு மகிழ்ச்சியான செய்தி.! 10 ரூபாய்க்கு ஆவின் பால் பாக்கெட்.! இன்று முதல் விற்பனை!!
சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பால்வளத்துறையின் கட்டுப்பாட்டில் ஆவின் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இங்கு சமன்படுத்தப்பட்ட, நிலைப்படுத்தப்பட்ட, குறைந்த கொழுப்பு என்ற வகைகளில் பால் பாக்கெட்டுகள் பல வண்ணங்களில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
இந்நிலையில் கடந்த மே 9ஆம் தேதி விட்டமின் ஏ மற்றும் டி நிறைந்த செறிவூட்டப்பட்ட 500 மில்லி ஆவின் டிலைட் பால் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த பால் பாக்கெட்டிற்கு பொதுமக்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பு கிடைத்துள்ளது. ஆவின் 500 மில்லி லிட்டர் டிலைட் பால் 21 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது.
இந்த நிலையில் அதனை தோடர்ந்து 200 மில்லி லிட்டர் டிலைட் பால் ரூ 10க்கும் இன்று டிசம்பர் 1ஆம் தேதி முதல் அறிமுகப்படுத்தப்பட்டு, விற்பனை செய்யப்பட உள்ளது. இது மக்களுக்கு பெரிதும் பயன்படலாம் எனவும், மக்கள் மத்தியில் இதற்கும் நல்ல வரவேற்பு இருக்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.