மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
அரசுப்பள்ளிக்கு தலைமை ஆசிரியையான 10-ஆம் வகுப்பு மாணவி! அவர் செய்த அதிரடி செயல்கள்!
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே உள்ள அரசு உயர்நிலைப்பள்ளியில் 75 மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர். அப்பள்ளியில் 7 ஆசிரியர்கள் பணியாற்றுகின்றனர். அந்த பள்ளியில் இரண்டு தினங்களுக்கு முன்பு, தலைமை ஆசிரியர் இருக்கையில் காவ்யா என்ற மாணவி அமர்ந்தார்.
அப்பள்ளியின் தலைமை ஆசிரியர் விநாயகமூர்த்தி உள்ளிட்ட ஆசிரியர்கள் காவ்யாவை வரவேற்று தலைமை ஆசிரியர் இருக்கையில் அமர வைத்து வருகைப்பதிவேட்டில் கையெழுத்திட்டனர். 10-ஆம் வகுப்பு மாணவியான காவ்யா உத்தரவுகள் பிறப்பிக்க மற்ற மாணவ, மாணவிகள் கேட்டு நடந்தனர்.
தலைமை ஆசிரியர் பணி குறித்து மாணவிக்கு, விநாயக மூர்த்தி விளக்கினார். பின்னர் ஆசிரியர்களுடன் காவ்யா ஆலோசனை நடத்தினார். பின்னர் ஒவ்வொரு வகுப்பிற்கும் சென்று ஆய்வு மேற்கொண்டார். மாணவ-மாணவிகளிடம் படிப்பு மட்டுமின்றி விளையாட்டு உள்ளிட்ட பிற துறைகளிலும் ஆர்வம் காட்ட வேண்டும் என அறிவுறுத்தினார்.
10-ஆம் வகுப்பு மாணவி தலைமை ஆசிரியை ஆனது எப்படி? என்பது குறித்து கேட்ட போது, இரண்டு தினங்களுக்கு முன்பு பெண் குழந்தைகள் தினம் என்பதால் அதன் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக மாணவி ஒருவரை ஒரு நாள் தலைமை ஆசிரியை யாக நியமித்துள்ளனர்.
அந்த வகையில் வருகை பதிவு, சக மாணவ, மாணவியர்களிடம் பழகும் மனப்பான்மை, பிறருக்கு உதவி செய்யும் மனப்பான்மை போன்றவற்றில் சிறந்து விளங்கியதால் காவ்யாவை ஒரு நாள் தலைமை ஆசிரியையாக தேர்வு செய்ததாக ஆசிரியர்கள் தெரிவித்தனர்.