மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
மணமேடையில் காதலன்..நான் கர்ப்பமா இருக்கேன் என கதறிய பள்ளி மாணவி.! கடைசியில் நிகழ்ந்த செம மாஸ் சம்பவம்.!
மதுரை மாவட்டம் நிலக்கோட்டை பகுதியைச் சேர்ந்தவர் உதயகுமார் (21). இவருக்கு அந்த பகுதியில் 10 ஆம் வகுப்பு படித்து வந்த பள்ளி மாணவி ஒருவருடன் பழக்கம் ஏற்ப்பட்டதை அடுத்து நாளடைவில் அந்த பழக்கம் காதலாக மலர்ந்தது. உதயகுமார் அந்த சிறுமியிடம் நான் உன்னை கல்யாணம் செய்து கொள்கிறேன் என ஆசை வார்த்தைகளை கூறி சிறுமியுடன் பழகி வந்துள்ளார்.
அந்த சிறுமியும் உதயகுமாரின் ஆசை வார்த்தைகளை நம்பி அவருடன் நெருக்கமாக இருந்துள்ளார். அவர்களின் நெருக்கத்தால் பள்ளி மாணவி கர்ப்பமாகி உள்ளார். அதனை அடுத்து அந்த மாணவி காதலனான உதயகுமாரிடம் தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு வற்புறுத்தியுள்ளார். ஆனால் காதலன் திருமணத்திற்கு சம்மதம் தெரிவிக்கவில்லை.
ஆனால் உதயகுமார் அந்த சிறுமியை ஏமாற்றி விட்டு வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்து கொள்ள இருப்பதாக தகவல் வெளியானதை அடுத்து அந்த சிறுமி மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். புகாரின் அடிப்படையில் போலீசார் மணமேடையில் அமர்ந்த காதலனை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர்.