#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
#Breaking: பிளஸ் 1 பொதுத்தேர்வு ரத்து கிடையாது - பள்ளிக்கல்வித்துறை அதிகாரப்பூர்வ அறிவிப்பு..!!
தமிழ்நாட்டில் கடந்த மார்ச், ஏப்ரல் மாதங்களில் 10, 11, 12-ஆம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு நடத்தப்பட்டு சமீபத்தில் தேர்வு முடிவுகள் வெளியானது. முன்பெல்லாம் 10, 12-ஆம் வகுப்புகளுக்கு மட்டும் பொதுத்தேர்வு நடந்த நிலையில், கொரோனாவில் தொடங்கி தற்போது வரை பிளஸ் 1 வகுப்பு மாணவர்களுக்கும் பொதுத்தேர்வு நடந்து வருகிறது.
மேலும் தொடர்ந்து மூன்று வருடங்கள் பொதுத்தேர்வு நடத்துவதால் மாணவர்கள் மன உளைச்சலுக்கு ஆளாவதாகவும், அதனால் 11-ஆம் வகுப்பு பொதுத்தேர்வினை ரத்து செய்ய வேண்டும் என்றும் ஆசிரியர்கள் சங்கம் கோரிக்கை விடுத்தனர். இந்த கோரிக்கையை ஏற்று சமீபத்தில் அமைச்சர் அன்பின் மகேஷ் தலைமையிலான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
ஆலோசனை கூட்டத்திற்கு பிறகு பேட்டியளித்த அமைச்சர், பிளஸ் 1 மாணவர்களின் பொதுத்தேர்வில் எந்தவித மாற்றமும் கிடையாது. வழக்கம் போலவே நடைபெறும். இருப்பினும் ஆசிரியர்களின் கோரிக்கையை பரிசீலிப்போம் என்று தெரிவித்துள்ளார். இது மாணவர்களிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளது.