பாக்கியாவிற்கு அடுத்தபடியாக வரும் பெரிய ஆபத்து! அதில் பாக்கியா மீண்டு வருவாரா? ப்ரோமோ வீடியோ இதோ....
படிக்கும் வயதில் இதெல்லாம் தேவையில்லை... பெற்றோர் செய்த அட்வைஸ்.! 11-ம் வகுப்பு மாணவி தூக்குப்போட்டு தற்கொலை.!

சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே மேட்டுப்பட்டி பகுதியை சேர்ந்த ரமேஷ் என்பவரின் மகள் சுகந்தி வாழப்பாடி அருகே முத்தம்பட்டியில் உள்ள தனியாா் பள்ளியில் பிளஸ் 1 படித்து வந்தாா். சமீப காலமாக மாணவி செல்போனில் ஒருவரிடம் பேசி வந்ததாக தெரிகிறது. இதையறிந்த மாணவி சுகந்தியின் பெற்றோர், படிக்கும் வயதில் இதெல்லாம் தேவையில்லை என்று கண்டித்து அறிவுரை கூறியுள்ளனர்.
இந்த நிலையில் நேற்று காலை வழக்கம் போல சுகந்தியின் பெற்றோர் வேலைக்கு சென்றுள்ளனர். சுகந்தி நேற்று பள்ளிக்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்துள்ளார். இந்தநிலையில் வேலை முடிந்து வீட்டிற்கு வந்த ரமேஷ், உள்ளே சென்று பார்த்தபோது தனது மகள் சேலையில் தூக்குபோட்டு தொங்கியுள்ளார். இதனை கண்டதும் ரமேஷ் கதறி அழுதுள்ளார்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் சுகந்தியின் உடலை மீட்டு சேலம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பெற்றோர் அறிவுரை கூறியதால் பிளஸ்-1 மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.