மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
பள்ளிக்கு செல்லும் வயதில் கையில் குழந்தை.. கர்ப்பத்திற்கு காரணம் யாருன்னு தெரிஞ்சா கொதிச்சு போயிடுவிங்க..!
வேலூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் பிரசவத்திற்காக 13 வயது சிறுமி அனுமதிக்கப்பட்டுள்ளார். 8 ஆம் வகுப்பு பயிலும் அந்த சிறுமிக்கு ஆண் குழந்தை பிறந்தது.
பிரசவத்திற்கு பின் அந்த சிறுமியின் கர்ப்பத்திற்கு யார் காரணம் என மருத்துவர்கள் விசாரித்துள்ளனர். சிறுமியின் பதிலை கேட்டு அனைவரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். ஏனென்றால் அந்த 13 வயது சிறுமியின் கர்ப்பத்திற்கு அவளின் தந்தை தான் காரணமாக இருந்துள்ளார்.
41 வயதாகும் அந்த சிறுமியின் தந்தை தொழிற்சாலையில் வெல்டராக பணிபுரிகிறார். அவரது மனைவி 8 வருடங்களுக்கு முன்னரே அவரை விட்டு பிரிந்துவிட்டார். மகன் மற்றும் மகள் இருவரும் தந்தையுடன் தான் இருந்துள்ளனர்.
2021 நவம்பர் மாதம் முதல் தந்தையே தன் மகளை பலமுறை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இதன் விளைவாக தான் அந்த சிறுமி கர்ப்பமாகி இப்போது ஒரு ஆண் குழந்தையை பெற்றெடுத்துள்ளார்.
சிறுமியின் இந்த கதையை கேட்ட பின் போலீசாரிடம் அளித்த புகாரின் பேரில் சிறுமியின் தந்தை போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.