மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
பேருந்தில் தவறவிட்ட 15 பவுன் நகை.. நேர்மையான நடத்துனரால் உரியவரிடம் ஒப்படைப்பு.!
திருச்சி மாவட்டம் புறத்தாக்குடி பகுதியில் சதீஷ்குமாா் - சத்யா தம்பதியினர் வசித்து வந்துள்ளனர். இந்நிலையில் சதீஷ்குமார்
சேலம் மாவட்டம் கெங்கவல்லியில் இருக்கும் தனது பெற்றோர் வீட்டிற்கு செல்வதற்காக கம்பம்-சென்னை பேருந்தில் ஏறி சென்று பெரம்பலூா் புறநகா் பேருந்து நிலையத்தில் இறங்கியுள்ளார்.
இதனைதொடர்ந்து சிறிது நேரம் கழித்து சதீஷ்குமார் தன் கையில் இருந்த கைப்பையை பேருந்தில் தவரவிட்டதை உணர்ந்துள்ளார். உடனே சதீஷ்குமார் அருகில் இருந்த காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். மேலும் தவறவிட்ட கைப்பையில் 15 பவுன் தங்க நகைகளும் கைபேசியும் வைத்திருந்ததாக புகாரில் சதிஷ்குமார் குறிப்பிட்டிருந்தார். இதன் அடிப்படையில் போலிஸார் தவறவிட்ட பையிலிருந்த கைபேசிக்கு அழப்பு விடுத்ததை தொடர்ந்து அந்த பேருந்தில் இருந்த நடத்துனர் எடுத்து பேசியுள்ளார்.
இதனையடுத்து அடுத்த நாள் காலை பெரம்பலூா் புறநகா் பேருந்து நிலையத்திற்கு அந்த பேருந்து மீண்டும் வந்தபோது அதன் நடத்துநா் பயணி சதீஷ்குமார் தவறவிட்ட கைப்பையை புறக்காவல் நிலையத்தில் ஒப்படைத்துள்ளார். இந்நிலையில் நடதுனரின் நேர்மையை கண்டு மகிழ்ச்சி அடைந்த காவல் துறையினர் அவரை பாராட்டினர்.
இதனையடுத்து சதீஷ்குமார்க்கு தகவல் தெரிவிக்கபட்டது. பின்னர் கைப்பையிலிருந்த 15 பவுன் நகைகள் மற்றும் கைப்பேசி ஆகியவற்றை சதீஷ்குமார் மனைவி சத்யாவிடம் காவல் துறையினர் ஒப்படைத்தனா்.