மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
மேடம் இவனா புடிச்சு சிறையில போடுங்க... வீட்டில் தனிமையில் இருந்த 15 வயது சிறுமியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட வியாபாரி...
தூத்துக்குடி மாவட்டம் நாசரேத் பிரகாசபுரம் பகுதியை சேர்ந்தவர் 15 வயது சிறுமி ஒருவர். இவர் அதே பகுதியில் உள்ள பள்ளி ஒன்றில் 10 ஆம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில் அதே பகுதியில் தர்மராஜ் என்ற நபர் கரும்புச்சாறு கடை நடத்தி வரும் நிலையில் அந்த சிறுமியின் வீட்டிற்கு அடிக்கடி சென்று வந்துள்ளார்.
அதேபோல் சம்பவத்தன்று சிறுமியின் வீட்டிற்கு சென்ற தர்மராஜ் சிறுமி வீட்டில் தனிமையில் இருப்பதை பார்த்துள்ளார். அதனையடுத்து சிறுமியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார். அதன்பின் அந்த சிறுமி இச்சம்பவம் குறித்து தனது பெற்றோரிடம் கூறியுள்ளார்.
அதனை கேட்டு அதிர்ச்சியடைந்த சிறுமியின் பெற்றோர் உடனே திருச்செந்தூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். புகாரின் பேரில் போலீசார் தர்மராஜ் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர். தொடர்ந்து, அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இந்நிகழ்வு அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.