மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
மதுபோதையில் காரை தாறுமாறாக ஓட்டிய ஓட்டுநர்... கட்டுப்பாட்டை இழந்ததால் இருவரின் உயிரைப்பறித்த கொடூரம்..! பதைபதைக்க வைக்கும் சிசிடிவி காட்சிகள்..!
அதிவேகமாக வந்த கார் கட்டுப்பாட்டை இழந்து சாலையில் சென்ற பாட்டி மற்றும் அவரது பேத்தி மீது மோதியதில், தூக்கி வீசப்பட்டு அவர்கள் உயிரிழந்த சோகம் நிகழ்ந்துள்ளது.
நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள திருக்குவளை அருகே அதிவேகமாக கார் ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்போது திடீரென கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையில் நடந்து சென்றுகொண்டிருந்த பாட்டி மற்றும் அவரது பேத்தியின் மீது வேகமாக மோதியுள்ளது. இதில் சம்பவ இடத்திலேயே தூக்கி வீசப்பட்டு இருவரும் உயிரிழந்துள்ளனர்.
பின் இதுகுறித்து காவல்துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டதை தொடர்ந்து, சம்பவ இடத்திற்கு விருந்த காவல்துறையினர் மதுபோதையில் காரை அதிவேகமாக ஓட்டிய ஓட்டுநரை கைது செய்துள்ளனர். மேலும் விபத்தில் 10-க்கும் மேற்பட்ட இருசக்கர வாகனங்கள் சேதமடைந்த நிலையில், இந்த கோர விபத்து குறித்த சிசிடிவி காட்சிகள் வெளியாகி பதைபதைப்பை ஏற்படுத்தியுள்ளது.