#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
அடக்கடவுளே... இரண்டு மாத கைக்குழந்தையுடன் குரங்கை விரட்டிய தந்தை... கடைசியில் நிகழ்ந்த பயங்கரம்!!
சேலம் மாவட்டம் ஏற்காடு நாகலூர் மலைகிராமத்தைச் சேர்ந்தவர்கள் நிஷாந்த் - மாலதி தம்பதியினர். இவர்களுக்கு இரண்டு மாதத்தில் கை குழந்தை உள்ளது. இந்நிலையில் தம்பதியினர் இருவரும் இரண்டு தினங்களுக்கு முன்பு தங்களது கைக்குழந்தையுடன் அருகில் இருந்த கடைக்கு சென்று பொருட்கள் வாங்க சென்றுள்ளனர்.
அவ்வாறு பொருட்கள் வாங்கி விட்டு வீடு திரும்பிய போது எதிர்பாராத விதமாக எதிரே குரங்கு ஒன்று வந்து நிஷாந்த் கையில் இருந்த மளிகை பொருட்களை பிடுங்கியுள்ளது. அதனால் குரங்கிடமிருந்து பொருட்களை வாங்க முயற்சித்த போது கையில் இருந்த பச்சிளம் குழந்தை கை தவறி கீழே விழுந்துள்ளது.
உடனே குழந்தையை அருகில் இருந்த ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அழைத்துச் சென்று முதலுதவி அளிக்கப்பட்ட நிலையில், பின்பு உயர் சிகிச்சைக்கு அரசு பெரிய மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்ட நிலையில் அங்கு குழந்தை சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளது. இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.