மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
நண்பர்களுடன் மதுகுடிக்க போறீங்களா? உஷார்.. 25 வயது இளைஞருக்கு அரங்கேறிய கொடூரம்.!
பொள்ளாச்சி நேதாஜி சாலையை சேர்ந்த அருண்கார்த்திக்(25) என்ற நபர் கடந்த ஆகஸ்ட் 10ஆம் தேதி வீட்டை விட்டு வெளியேறினார்.3 நாட்கள் ஆகியும் வீடு திரும்பாததால் பதறிய பெற்றோர்கள் மூன்று நாட்களாக தேடி அலைந்து அதன் பின் போலீசில் புகார் கொடுத்தனர். அதன் பேரில் அருண்கார்த்திக்கின் நெருங்கிய நண்பர்கள் அரவிந்த், சூரிய பிரகாஷ் இருவரையும் பிடித்து போலீசார் விசாரித்ததில் அவர்கள் தங்களுக்கு எந்த சம்பந்தமும் இல்லை என்று கூறிய நிலையில் அவர்களை விடுவித்தனர்.
இருவரது செல்போன் சிக்னலையும் போலீசார் ஆராய்ந்ததில் மீண்டும் சந்தேகம் ஏற்பட அவர்களை பிடித்து போலீசார் கிடுக்கிப்பிடி விசாரணை மேற்கொண்டனர். அருண் கார்த்திக், அரவிந்த், சூரிய பிரகாஷ் மூன்று பேரும் நெருங்கிய நண்பர்கள் என்பதும், இவர்கள் மீது காவல் நிலையங்களில் பல வழக்குகள் பதிவாகி இருப்பதும் தெரியவந்துள்ளது. பணம் கொடுக்கல் வாங்கல் பிரச்சனை காரணமாக அருண் கார்த்திகை பேச அழைத்த இருவரும் அவருடன் சேர்ந்து மது அருந்தியுள்ளனர்.
அப்போது மூன்று பேருக்குள்ளும் தகராறு ஏற்பட்ட நிலையில் அரவிந்த் மற்றும் சூரிய பிரகாஷ் இருவரும் சேர்ந்து அருண் கார்த்திக்கை மிக கொடூரமாக தாக்கியதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். அதன் பின்னர் சந்திரபுரம் பகுதியில் இருக்கும் கல் குவாரிக்கு உடலை எடுத்துச் சென்ற இருவரும் அங்கிருந்த கழிவுகளில் உடலை புதைத்து விட்டு தப்பி ஓடியது தற்போது போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.