பிக்பாஸ் வீட்டில் கர்ப்பமான அன்ஷிதா.. ரயான் கேட்ட கேள்வி.. வைரலாகும் வீடியோ.!
மதுகுடிக்க பணம் கேட்டு ரவுடி தகராறு... கட்டையால் மண்டையை பிளந்த தந்தை, மகன்..!
மது குடிக்க பணம் கேட்டு கத்தியை காட்டி தகராறில் ஈடுபட்ட ரவுடியை, தந்தை மற்றும் மகன் சேர்ந்து கொடூரமாக தாக்கியுள்ளனர்.
நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணி பொய்கைநல்லூரை சேர்ந்தவர் நடவண்டி மோகன். இவர் அப்பகுதியில் ரவுடியாக சுற்றி வந்த நிலையில், பழக்கடை நடத்தி வரும் தந்தை, மகனாக மாரிமுத்து, மதியழகன் ஆகியோருடன் தகராறில் ஈடுபட்டுள்ளார்.
மது குடிப்பதற்காக பணம் கேட்டு தகராறு செய்ததைத் தொடர்ந்து, வாய் தகராறு இரு தரப்பினருக்கும் இடையே கைகலப்பாக மாறியுள்ளது. இதில் நடவண்டி மோகன் அவதூறாக பேசவே, கோபமுற்ற தந்தை மகன் இருவரும் ரவுடி நடவண்டி மோகனை கட்டையால் அடித்து மண்டையை பிளந்துள்ளனர்.
இந்த சம்பவம் அங்குள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகிய நிலையில், காவல்துறையினருக்கு தகவல் தெரியவர சிசிடிவி கேமரா காட்சிகளை ஆதாரமாகக் கொண்டு தந்தை, மகன் இருவரையும் கைது செய்துள்ளனர்.