தன் வீட்டில் நடந்த மோசமான சம்பவம்.! நடிகை சீதா போலீசில் பரபரப்பு புகார்.! நடந்தது என்ன?
பாதாள சாக்கடையில் மண் சரிந்து தொழிலாளி பலி!,.3 பேர் கைது..!
பாதாள சாக்கடை பணியில் மண் சரிந்து தொழிலாளி பலியான விவகாரத்தில் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மதுரை மாநகராட்சி விளாங்குடி பகுதியில் பாதாள சாக்கடையில் கழிவுநீர் குழாய் பதிக்கும் பணி நடைபெற்று வந்தது. இந்த பணியில் 3 தொழிலாளர்கள் ஈடுபட்டிருந்த நிலையில், திடீரென ஏற்பட்ட மண்சரிவின் காரணமாக ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த சதீஷ் என்ற தொழிலாளி மண்சரிவில் சிக்கிக் கொண்டார்.
சுமார் 20 அடி ஆழத்தில் கீழே விழுந்த சதீஷ் மீது மணல் சரிந்ததால் மூடப்பட்ட நிலையில், அவரை மீட்க ஜே.சி.பி இயந்திரம் மூலம் சக பணியாளர்கள் முயற்சி மேற்கொண்டனர். இந்த முயற்சியில் எதிர்பாரதவிதமாக அவரது தலை துண்டிக்கப்பட்டது.
இதனையடுத்து இந்த சம்பவம் குறித்து தீயணைப்பு துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு துறையினர் சதீஷின் உடலை, நீண்ட போராட்டத்திற்கு பிறகு மீட்டனர். இதனையடுத்து பிரேத பரிசோதனைக்காக அவரது உடல் மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த கீழ் புதூர் காவல்துறையினர், தீவிர விசாரணைக்கு பின்பு சென்னையைச் சேர்ந்த ஏ.சி.சி.பி.எல் ஒப்பந்த நிறுவனத்தின் உரிமையாளர் சுந்தரபாண்டியன், மேலாளர் பாலு, பணியிட பொறியாளர் சிக்கந்தர், ஓட்டுநர் சுரேஷ் குமார் ஆகிய 4 பேர் மீது அஜாக்கிரதையாக செயல்பட்டு விபத்தை ஏற்படுத்தியது உள்ளிட்ட பிரிவுகளின் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
இந்த நிலையில் அந்த நிறுவனத்தின் மேலாளர் பாலு , பணியிட பொறியாளர் சிக்கந்தர், பொக்லைன் ஓட்டுனர் சுரேஷ் குமார் ஆகிய 3 பேரும் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.