மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
3 மாத குழந்தையை குளிப்பாட்டிய இளம்தாய்! சிறிது நேரத்தில் நேர்ந்த பெரும் விபரீதம்! வெளியான பகீர் பின்னணி!
உசிலம்பட்டி அருகே குப்பணம்பட்டி பகுதியை சேர்ந்தவர் சரவணன். இவருக்கு கடந்த 2016-ம் ஆண்டு கட்டக்கருப்பன்பட்டியை சேர்ந்த கலாவதி என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு 2 வயதில் யுவஸ்ரீ் மற்றும் 3 மாதத்தில் மோனிஷா என்ற இருபெண் குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் சரவணன் பெங்களூரில் தனியார் கம்பெனியில் வேலைசெய்து வருகிறார். அதனால் கலாவதி தனது குழந்தைகளுடன் கட்டக்கருப்பன்பட்டியில் உள்ள தாய் வீட்டில் வசித்து வந்துள்ளார்.
இந்நிலையில் 3 மாத குழந்தையான மோனிஷாவை தினமும் கலாவதியின் தாயார் குளிக்க வைத்துவந்துள்ளார். இந்நிலையில் சமீபத்தில் அவர் வெளியே சென்று விட்டநிலையில் கலாவதி தனது 3 மாத குழந்தை மோனிஷாவை குளிக்க வைத்துள்ளார். அப்போது குழந்தைக்கு மூச்சி திணறல் ஏற்பட்டு சிறிது நேரத்தில் அமைதியாகி விட்டது. இதனால் பதறிப்போன கலாவதி உடனே குழந்தையை தூக்கி கொண்டு உசிலம்பட்டி அரசு மருத்துவமனைக்கு சென்றுள்ளார்.
அங்கு குழந்தையை பரிசோதனை செய்த மருத்துவர்கள் குழந்தை ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளார். அதனைத்தொடர்ந்து குழந்தையின் உடல் மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. மேலும் இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து பல கோணங்களில் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.