திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
டிக்கியை திறந்த ஓட்டுனருக்கு ஷாக்... குடும்பத்தோடு பதறியடித்து காவல்நிலையத்திற்கு ஓடிய ஓட்டுநர்..!
ஓட்டுனரின் வீட்டுக்கதவை உடைத்து 30 சவர நகைகள் மற்றும் ரூ.1லட்சம் ரொக்கம் திருடப்பட்டுள்ளது.
திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள பணகுடி அடுத்த தெற்கு பெருங்குடி கிராமத்தைச் சார்ந்தவர் சுந்தரம். இவரின் மகன் முருகன். இவர் வெளிநாட்டில் ஓட்டுநராக பணியாற்றி வருகிறார். இந்த நிலையில் முருகன் சமீபத்தில் விடுமுறைக்காக சொந்த ஊருக்கு வந்து சென்றுள்ளார்.
கடந்த மாதம் 7ஆம் தேதி மனைவி மற்றும் பிள்ளைகளுடன் சென்னையில் உள்ள உறவினர் வீட்டிற்கு புறப்பட்டு சென்ற நிலையில், இன்று காலை மீண்டும் வீட்டிற்கு திரும்பபியுளார். அப்போது பின் பக்க கதவு உடைக்கப்பட்டிருந்தது. மேலும், மர்மநபர்கள் பீரோவை உடைத்து அதிலிருந்த 30 சவரன் நகைகள் மற்றும் ரூ.1 லட்சம் ரொக்கத்தை திருடி சென்றது அம்பலமானது.
இந்த விஷயம் தொடர்பாக முருகன் பணகுடி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இந்த புகாரை ஏற்ற காவல்துறையினர் நகை மற்றும் பணத்தை திருடிசென்ற கொள்ளையர்களை தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.