மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
ஒரே குடும்பத்தில் 4 பேரை காவு வாங்கிய கொசு விரட்டி லிக்விட் இயந்திரம்!!
கொசுக்களை விரட்ட பல்வேறு நவீன கருவிகள் கண்டுபிடிக்கப்பட்டு மார்க்கெட்டில் விற்பனை செய்யபட்டது வருகிறது.
கொசுப்பத்தி, சுருள் கொசு விரட்டி, கொசு விரட்டி சாம்பிராணி, லிக்விட் இயந்திரம் போன்று பல்வேறு பொருட்களை நாம் அன்றாடம் வாழ்க்கையில் பயன்படுத்தி கொண்டு தான் இருக்கிறோம்.
அந்தவகையில், சென்னை மணலி அருகே ஒரு குடும்பத்தில் 4 பேர் இந்த லிக்விட் இயந்திரத்தால் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலையில், சம்பவ தினத்தன்று கொசு விரட்டும் இயந்திரமானது சூடாகி உருக தொடங்கியுள்ளது. பின்னர் கீழே இருந்த அட்டைப்பெட்டியில் உருகி விழுந்துள்ளது. இதனால் அட்டைப்பெட்டியில் தீ பற்றி கொண்டுள்ளது.
இதனால், வீடு முழுவதும் புகை மூட்டம் ஏற்பட்டு, வீட்டில் இருந்த சந்தான லட்சுமி மற்றும் அவரின் பேத்திகள் 3 பேர் என நால்வரும் உயிரிழந்துள்ளனர்.