மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
ஆடு வளர்ப்பவர்களே ஜாக்கிரதை.. 6 ஆடுகளை கடித்தே கொன்ற நாய்கள்.. நள்ளிரவில் நாய்கள் வெறிச்செயல்..!!
தர்மபுரி மாவட்டத்தில் இருக்கும் பாளையம் கிராமத்தைச் சார்ந்த விவசாயி சிம்மராஜன். இவர் வீட்டில் செம்மறி ஆடுகளை வளர்த்து வந்துள்ளார்.
நேற்று நள்ளிரவு ஆடுகள் திடீரென அலறவே, வீட்டில் இருந்த சிம்மராஜன் வெளியே வந்து பார்த்துள்ளார். அப்போது, தெருநாய்கள் ஆடுகளை கடித்துக் குதறியுள்ளன.
அதனை விரட்டியடித்து பார்க்கையில் ஆறு ஆடுகள் நாய்களின் தாக்குதலில் இறந்து கிடந்துள்ளன. சில ஆடுகள் காயத்துடன் உயிருக்கு போராடவே, சம்பவம் தொடர்பாக கால்நடை மருத்துவருக்கு தகவல் தெரிவிப்பட்டது.
சம்பவ இடத்திற்கு விரைந்த கால்நடை மருத்துவர், காயமடைந்த ஆடுகளுக்கு சிகிச்சை அளித்து வருகிறார்.