மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
ஒரு கணவனுக்கு இதுபோன்ற மனைவி கிடைப்பதே மிகப்பெரிய வரம்! 66 வயது மூதாட்டியின் நெகிழ்ச்சி சம்பவம்!
சென்னை செங்குன்றம் பகுதியைச் சேர்ந்த 76 வயது முதியவர் மதன கோபால் எனபர் நீரிழிவு நோய், ரத்த அழுத்தம், பக்கவாதம், மனநலம் பாதிப்பு உள்ளிட்ட பல நோய்களுக்கு ஆளாகி அவதிப்பட்டு வந்துள்ளார்.
இந்நிலையில், கடந்த 10 நாட்களுக்கு முன்பு மதன கோபாலுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து அவர் பொன்னேரி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
மதனகோபாலின் 66 வயதான மனைவி லலிதா தான் கணவருக்கு கொரோனா இருப்பது தெரிந்ததும் தான் கணவனை விட்டுப் பிரியாமல் மருத்துவரின் அனுமதி பெற்று கொரோனா வார்டிலேயே கணவருடன் 10 நாட்கள் இருந்து கணவரைக் கவனித்து வந்துள்ளார்.
இதனையடுத்து 66 வயதான லலிதாவுக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொண்டதில் அவருக்குத் தொற்று இல்லை என ரிசல்ட் வந்துள்ளது. 10 நாட்கள் சிகிச்சை முடிந்து முதியவர் பூரண குணமடைந்து வீட்டுக்குச் சென்றது அனைவருக்கும் நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது.
சமீபத்தில் மதுரையில் 60 வயது முதியவர் ஒருவர் கொரோனா அறிகுறி தென்பட்டதால், வீட்டில் இருந்தவர்கள் அவரை வலுக்கட்டாயமாக வீட்டை விட்டு வெளியேறுமாறு வற்புறுத்திய சம்பவம் நடைபெற்றது. அவர்கள் மத்தியில் மூதாட்டி லலிதாவின் செயல் நெகிழ்ச்சியடையவைத்துள்ளது. ஒரு கணவனுக்கு இதுபோன்ற மனைவி கிடைப்பதே மிகப்பெரிய வரம் எனவும் பலரும் மூதாட்டி லலிதாவை பாராட்டி வருகின்றனர்.