மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
#Breaking: பட்டாசு ஆலைக்கு சொந்தமான குடோனில் பயங்கர வெடி விபத்து.. 7 பேர் பலி., 10 பேர் உயிர் ஊசல்.!
தனியாருக்கு சொந்தமான பட்டாசு ஆலை குடோன் வெடித்து சிதறி விபத்து ஏற்பட்டது.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள குருவிமலை பகுதியில் பட்டாசு ஆலை குடோன் உள்ளது. இந்த குடோனில் இன்று வழக்கம்போல தொழிலாளர்கள் பணியாற்றி வந்தனர்.
இந்த நிலையில், இன்று பட்டாசு குடோன் திடீரென வெடித்து சிதறியது. இந்த விபத்தில் 7 பேர் நிகழ்விடத்திலேயே உடல் கருகி பரிதாபமாக பலியாகினர். மேலும், 10 க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.
விபத்து குறித்து தகவல் அறிந்த மீட்பு படையினர் மற்றும் காவல் துறையினர், நிகழ்விடத்திற்கு விரைந்து மீட்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். சம்பவம் தொடர்பாக விசாரணை நடந்து வருகிறது.
விபத்தில் காயமடைந்தோர் காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்ட்டுள்ளனர். அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.