ஷிவ்ராஜ்குமாரின் மிரட்டல் லுக்.. 45 படத்தின் அலறவைக்கும் டீசர்.!
மசாஜ் சென்டர் என்ற பெயரில் இளம் அழகிகளுடன் உல்லாசம்! போலீசாரின் வேட்டையில் சிக்கிய 8 பேர்.

கோவையில் இயங்கிவரும் சில முக்கிய ஹோட்டல்கள், தனியாருக்கு சொந்தமான சில கட்டிடங்களில் மசாஜ் சென்டர் என்ற பெயரில் விபச்சாரம் நடப்பதாக போலீசாருக்கு புகார்கள் வந்தது. இதனை அடுத்து நடவடிக்கை எடுக்குமாறு போலீஸ் கமிஷனர் சுமித் சரண் உத்தரவிட்டார்.
கமிஷ்னரின் உத்தரவை அடுத்து கோவை முழுவதிலும் உள்ள மசாஜ் சென்டர்களில் நடத்தப்பட்ட சோதனையில் ஒருசில மசாஜ் சென்டர்களில் விபசாரம் நடப்பது உறுதி செய்யப்பட்டு அதில் ஈடுபட்ட 6 பெண்கள் உட்பட 8 பேரை போலீசார் கைது செய்தனர்.
அதனை அடுத்து அணைத்து மசாஜ் சென்டர் உரிமையாளர்களையும் அழைத்து போலீசார் ஆலோசனை கூட்டம் ஒன்றை நடத்தினர். அதில், முறையாக அனுமதி பெறாமல் மசாஜ் சென்டர் நடத்த கூடாது என்றும், அவ்வாறு நடத்தினால் மசாஜ் சென்டர் உரிமையாளர், இடம் வாடகைக்கு கொடுத்தவர் என அனைவரும் கைது செய்யப்படுவார்கள் என எச்சரித்து அனுப்பினர்.