கொரோனா சமயத்தில் உலக சாதனை படைத்த 9 வயது தமிழக சிறுமி.! குவிந்துவரும் பாராட்டுக்கள்.!



9 years girl got new record

சென்னை பழைய வண்ணாரப் பேட்டையைச் சேர்ந்த லட்சுமி சாய் ஸ்ரீ என்ற  9 வயது சிறுமி 5 ஆம் வகுப்பு படித்து வருகிறார். கொரோனா அச்சுறுத்தலால் பள்ளிகள் மூடப்பட்டதால் சிறுமி வீட்டில் இருந்தபடியே ஆன்லைன் வகுப்புகளில் கல்வி பயின்று வந்துள்ளார். இந்நிலையில் இந்த சூழ்நிலையை பயனுள்ளதாக மாற்றிய லட்சுமி சாய் ஸ்ரீ ஒரு மணிநேரத்தில் 45 வகையான உணவுகளை சமைத்து சாதனை படைத்துள்ளார்.

கொரோனாவால் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு காலத்தில் ஓய்வு நேரங்களில் தாயுடன் சேர்ந்து சமையலுக்கு சிறு சிறு உதவிகளை செய்து வந்த லட்சுமி சாய் ஸ்ரீ சமையல் மீது அதிக ஆர்வம் கொண்டு உணவுகளை அவரே சமைக்க தொடங்கியுள்ளார். சிறுமியின் ஆர்வத்தை பார்த்த தாயார் தனது மகளை சாதனை முயற்சியில் ஈடுபடுத்த வழிநடத்தியுள்ளார்.

young girl

இந்தநிலையில் சென்னையில் நடைபெற்ற போட்டியில் தமிழர்களின் பாரம்பரிய உணவுகளான கம்பு தோசை, கேழ்வரகு இட்லி, கேழ்வரகு புட்டு, சிறு தானியங்கள், மீன் வருவல், இறால் வறுவல், சிக்கன் 65 என்று பலரையும் ஈர்க்கும் வகையில் விதவிதமாக சமைத்துள்ளார். இதனையடுத்து ஒரு மணிநேரத்தில் 45 வகையான உணவுகளை சமைத்தால் சாதனை புத்தகத்தில் இடம் பிடித்து பெருமை சேர்த்துள்ளார். இந்தநிலையில் சாதனைபடைத்த சிறுமியை பலரும் பாராட்டி வருகின்றனர்.