மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
5ம் வகுப்பு படிக்கும் சிறுவன் தூக்கிட்டு தற்கொலை.! காரணம் என்ன.. கதறும் பெற்றோர்.!
திருப்பூர் மாவட்டம் பல்லடத்தை அடுத்துள்ள மாணிக்கபுரம் என்ற கிராமத்தில் வசித்து வரும் சேகர் என்பவரின் மகன் கோகுல் வயது 10 என்பவர் கல்லம்பாளையம் பகுதியிலிருக்கின்ற ஒரு அரசு பள்ளியில் 5ம் வகுப்பு படித்து வருகிறார்.
இந்நிலையில், சேகர் வீட்டில் வைத்திருந்த 5000 ரூபாய் ரொக்கம் திடீரென்று காணாமல் போனது. இது தொடர்பாக, சிறுவன் கோகுலிடம் அவனுடைய பெற்றோர் விசாரித்துள்ளனர். ஆனாலும் பணத்தை தான் எடுக்கவில்லை என்று சிறுவன் தெரிவித்துள்ளான்.
ஆனாலும் அதனை நம்பாத பெற்றோர், நாங்கள் இருவரும் வேலைக்கு சென்று வீட்டிற்கு வருவதற்குள் மாயமான பணம் திரும்பி வரவேண்டும் என்று அந்த சிறுவனிடம் தெரிவித்து, எச்சரித்து சென்றதாக சொல்லப்படுகின்றது. இதனால் பயந்து போன சிறுவன், வீட்டிலிருந்த தன்னுடைய தாயின் சேலையால், தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த விவகாரம் குறித்து, பல்லடம் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து, தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.