மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
முந்தரி தோப்பில் தூக்கில் தொங்கிய 17 வயது மாணவி: போலீசார் கைப்பற்றிய கடித்தத்தால் பரபரப்பான கிராமம்..!
17 வயது மாணவி முந்தரி தோப்பில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் நெய்வேலி அருகே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடலூர் மாவட்டம், நெய்வேலி டவுன்ஷிப் அருகேயுள்ள உழவன் குப்பம் கிராமத்தை சேர்ந்தவர்ஏழுமலை. இவரது மகள் மீனாட்சி வயது (17). இவர் நெய்வேலியில் உள்ள தனியார் கல்லூரியில் பி.எஸ்.சி படித்து வந்தார்.
இந்த நிலையில், நேற்று முன்தினம் மீனாட்சி திடீரென்று மாயமானார். அவரது பெற்றோர்கள் அவரைத் தேடி அலைந்தனர். எங்கு தேடியும் கிடைக்காத பட்சத்தில் முத்தாண்டி குப்பம் காவல் நிலைத்தில் மகள் காணாமல் போனது குறித்து புகார் அளித்தனர்.
புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்ட நிலையில், அந்தப் பகுதியில் உள்ள ஒரு முந்திரி தோப்பில் மீனாட்சி தூக்கில் தூங்குவதாக தகவல் கிடைத்தது. தகவலறிந்த பண்ருட்டி துணைக் கண்காணிப்பாளர் சபியுல்லா காடாம்புலியூர் காவல் நிலைய ஆய்வாளர் ராஜதாமரை பாண்டியன் தலைமையிலான காவல்துறையினர் மீனாட்சியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு முண்டியம்பாக்கம் அரசு மருத்துவ கல்லூரிக்கு அனுப்பி வைத்தனர்.
இதற்கிடையே மீனாட்சி தனது வீட்டில் கடிதம் எழுதி வைத்த கடிதம் சிக்கியது. அதில் எனது தற்கொலைக்கு 4 பெண்கள் மட்டுமே காரணம் என்றும் அவர்களின் பெயர்களையும் குறிப்பிட்டுள்ளார். இந்தக் கடிதத்தை கைப்பற்றிய காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.