மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
கார் ஓட்டுநர் வீடு புகுந்து வெட்டி கொலை... காவல்துறை விசாரணையில் கள்ளத்தொடர்பு அம்பலம்.!
பெண்ணுடன் ஏற்பட்ட தகாத உறவால் ஆவடியைச் சார்ந்த கார் ஓட்டுநர் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
திருவள்ளூர் மாவட்டம் ஆவடி பொத்தூர் செல்வகணபதி நகரைச் சேர்ந்தவர் சுரேஷ்குமார் 29 வயதான இவர் வாடகை கார் ஓட்டுநராக பணியாற்றி வந்தார். கடந்த எட்டு மாதங்களுக்கு முன்பு இவருக்கு விஜயலட்சுமி என்ற பெண்ணுடன் தகாத உறவு ஏற்பட்டது.
இந்நிலையில் சுரேஷ்குமார் இன்று காலை வேலைக்கு கிளம்புவதற்காக தயாராகிக் கொண்டிருந்தார். அப்போது இவரது வீட்டிற்குள் புகுந்த மர்ம நபர்கள் சுரேஷ்குமாரை கத்தியால் குத்தி படுகொலை செய்துவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றனர். இச்சம்பவம் அறிந்து வந்த ஆவடி டேங்க் பேக்டரி காவல்துறையினர் கொலை செய்யப்பட்ட சுரேஷ்குமாரின் உடலை பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக நடத்திய தீவிர விசாரணையில் விஜயலட்சுமியின் முதல் கணவர் சத்யா தனது அடியாட்களை ஏவி விட்டு சுரேஷ்குமாரை கொலை செய்தது தெரியவந்தது.
கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்புதான் சுரேஷ்குமார் விஜயலட்சுமி உடன் பொத்தூர் செல்வகணபதி நகரில் குடி வந்திருக்கிறார். இந்நிலையில் அவர் விஜயலட்சுமியின் முதல் கணவரால் படுகொலை செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவத்தின் போது விஜயலட்சுமியின் கையிலும் வெட்டு காயம் ஏற்பட்டுள்ளது. அவருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த கொலை சம்பவம் தொடர்பாக தலைமறைவாக இருக்கும் சத்யா மற்றும் அவரது அடியாட்களை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.