தன் வீட்டில் நடந்த மோசமான சம்பவம்.! நடிகை சீதா போலீசில் பரபரப்பு புகார்.! நடந்தது என்ன?
இந்த 2 லட்சத்த வெச்சிக்கோ உங்கிட்ட இருக்கற சில்லறை காச கொடு!,,: 24 ஆயிரத்தை அபேஸ் செய்த பலே ஆசாமி
கடலூர் மாவட்டம், சிதம்பரம் நகரில் மந்தக்கரை காமாட்சி அம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் மூர்த்தி. இவருடைய மனைவி நாகராணி (55), இவர் தனது வீட்டின் முன்பு இட்லி கடை நடத்தி வருகிறார். இவரது கடைக்கு மர்மநபர் ஒருவர் தினமும் வந்து இட்லி சாப்பிட்டுள்ளார். இந்த நிலையில் அந்த மர்மநபர் நேற்றும் நாகராணியின் கடைக்கு சென்று இட்லி சாப்பிட்டுள்ளார்.
பின்னர் அவர், நாகராணியிடம் தனது மருமகளுக்கு இந்த வாரம் வளைகாப்பு நடத்த திட்டமிட்டுள்ளதாகவும், 300 பேர் சாப்பிடும் அளவுக்கு இட்லி, வடை உள்ளிட்ட உணவு பொருட்களை ஆர்டரின் பேரில் தயார் செய்து கொடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார். அதற்கு நாகராணி சம்மதம் தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து அவர், தன்னிடம் 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளாக மொத்தம் ரூ. 2 லட்சம் உள்ளதாகவும், அதனை வைத்துக் கொண்டு சில்லைறையாக உள்ள பணத்தை கொடுத்து உதவ வேண்டும் என்றும் கூறியுள்ளார். மேலும் அவர் தற்போது வளைகாப்பு நிகழ்ச்சிக்கு தேவையான பொருட்களை அவசரமாக வாங்க வேண்டி இருப்பதால், உதவியாக செய்யுங்கள். பின்னர் நீங்கள் கொடுத்த பணத்தை திருப்பி கொடுத்துவிட்டு எனது பணத்தை வாங்கிக்கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.
தினந்தோறும் தவறாமல் கடைக்கு வரும் நபர் என்பதால், அவரை நம்பிய நாகராணி தன்னிடம் இருந்த ரூ. 24 ஆயிரத்தை கொடுத்துள்ளார். இதனையடுத்து மர்மநபர் நாகராணியிடம் ரூ. 2 லட்சம் இருப்பதாக கூறி ஒரு பையை கொடுத்துவிட்டு அங்கிருந்து சென்றார். நீண்ட நேரம் ஆகியும் அவர் திரும்பி வராததால், சந்தேகமடைந்த நாகராணி மர்மநபர் கொடுத்த பையை பிரித்து பார்த்தபோது, அதில் பணம் ஏதும் இல்லை.
இதன் பின்னரே தான் ஏமாற்றப்பட்டதை அறிந்த நாகராணி, சிதம்பரம் நகர காவல் நிலையத்தில் இந்த சம்பவம் குறித்து புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த சிதம்பரம் நகர காவல் துணை ஆய்வாளர் நாகராஜன் விசாரணை மேற்கொண்டு மர்மநபரை தேடி வருகிறார்.இந்