#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
#வீடியோ: இன்டர்நெட் இல்லா காலத்தில்... மரத்தில் தொங்கி விளையாண்ட மகிழ்ச்சி பருவம்.!
நமது தந்தை, தாத்தா காலங்களில் இன்டர்நெட் சேவை என்பது பெருமளவு அறிமுகம் ஆகாத சேவை ஆகும். இந்தியாவை பொறுத்த வரையில் அன்று தட்டச்சு, தந்தி, அஞ்சலக அலைபேசி போன்ற சேவைகள் மட்டுமே உபயோகத்தில் இருந்தது. பின்னாளில் ஏற்பட்ட வளர்ச்சி நம்மிடையே குறுகிய காலத்தில் பல விஷயங்களை ஏற்படுத்திவிட்டது.
இன்று கைகளில் அலைபேசி இல்லாமல் தனிமனிதனால் முழுவதுமாக ஒருமணிநேரம் கூட அமைதியாக இருக்க இயலாது என்பதை போன்ற நிலை ஆகிவிட்டது. ஆனால், நமது தந்தை, தாத்தா காலங்களில் அவை என்ன என்று தெரியாத காலமாக இருந்தது. நண்பர்கள் அனைவரும் தங்களின் இளவயதுகளை இன்பத்துடன் கழித்து வந்தனர்.
செல்போன்களின் தாக்கம் கிராமங்களில் கூட பெரும் மாற்றத்தை ஏற்படுத்த தொடங்கிவிட்ட நிலையில், அன்றோ விடுமுறை நாட்கள் என்றால் அனைவரும் ஒன்றாக சேர்ந்து வயல்வெளிகளுக்கு சென்று அங்குள்ள ஆலமர விழுதில் ஊஞ்சல் ஆடுவது. சாய்த்துள்ள மரக்கிளையை பிடித்து தொங்கி விளையாடுவது என மகிழ்ச்சியாக இருந்து வந்தனர்.
அதனால் கை-கால்களில் வாங்கிய அடிகளும் நமது உடலில் தழும்பாக இருக்கும். அவற்றை இன்று நினைத்து மட்டுமே பார்க்க முடியும் என்ற போதிலும், சில நேரங்களில் அதுகுறித்த வீடியோ கண்களில் தென்பட்டால் சிறுவயதில் செய்த சேட்டைகளும், செல்ல குறும்புகளும் தான் நியாபகம் வருகிறது.