திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
தொடர் கனமழையால் இடிந்து விழுந்த வீடு.. உயிர் சேதமின்றி மூவர் படுகாயம்.!
தமிழகத்தில் பெரும்பாலான இடங்களில் கடந்த சில நாட்களாக கன மழை பெய்து வருகிறது. இதில் பல்வேறு இடங்களில் கட்டிடத்தின் சுவர் இடிந்து விழுந்து விபத்து ஏற்பட்டு வருகிறது.
இந்நிலையில் திருவெண்காடு பகுதியில் பெய்து வந்த கன மழை காரணமாக பெருந்தோட்டம் பெரிய குளதெருவில் வசித்து வந்த ஜெமீன் ராஜ் என்பவரின் வீடு அதிகாலை இடிந்து விழுந்துள்ளது. இதில் வீட்டில் உறங்கிக்கொண்டிருந்த ஜெமீன் ராஜ் அவரது மணி கமலாதேவி மற்றும் மகள் சுபஶ்ரீ அதிர்ச்சியடைந்து எழுந்துள்ளனர்.
மேலும் கட்டிடத்தின் சுவர் இடிந்து விழுந்ததால் மூவரும் பலத்த காயமடைந்து உள்ளனர். இதனை தொடர்ந்து சத்தம் கேட்டு அங்கு வந்த அக்கம்பக்கத்தினர் அவர்கள் மூவரையும் மீட்டு சீர்காழி அரசு மருத்துவமனைக்கு 108 ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைத்தனர். அங்கு மருத்துவர்கள் ஜெமீன் ராஜ், கமலா தேவி மற்றும் சுபஶ்ரீக்கு சிகிச்சை அளித்து வருகின்றனர்.
இதனை தொடர்ந்து சீர்காழி துணை வட்டார வளர்ச்சி அலுவலர் மாரிமுத்து, ஊராட்சித் தலைவர் மோகனா ஜெய்சங்கர் மற்றும் ஊராட்சி செயலர் கண்ணன் ஆகியோர் வீடு இடிந்து காயமடைந்த ஜெமீன் ராஜ் குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினர்.