அடேங்கப்பா.. நடிகர் மாதவன் வாங்கியுள்ள காஸ்ட்லி சொகுசு படகு.! விலையை கேட்டு வாயை பிளந்த ரசிகர்கள்!!
விபத்தில் சிக்கிய காதலி... வீசிவிட்டு சென்ற காதலன்... இளம் பெண்ணுக்கு நேர்ந்த சோக முடிவு.!
உடையார்பாளையம் அருகே விபத்தில் காயமடைந்த காதலியை பள்ளத்தில் காதலன் வீசி சென்ற சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. பெரம்பலூர் மாவட்டம் அல்லிநகர் பகுதியைச் சார்ந்தவர் அபிநயா வயது 23. இவரது தந்தை சண்முகசுந்தரம் இறந்துவிட்ட நிலையில் குடும்பத்தின் வறுமையை போக்குவதற்காக அரியலூரில் உள்ள மளிகை கடை ஒன்றில் ஊழியராக பணியாற்றி வந்திருக்கிறார்.
தஞ்சை மாவட்டம் பந்தநல்லூர் கிராமத்தைச் சார்ந்த கண்ணன் என்பவரது மகன் பார்த்திபன் வயது 33. சில நாட்களுக்கு முன்பு அபிநயா தஞ்சாவூரில் வேலை செய்தபோது பார்த்திபனுக்கும் அபிநயாவிற்கும் இடையே காதல் மலர்ந்திருக்கிறது. இவர்கள் காதலுக்கு இரு வீட்டிலும் எதிர்ப்பு கிளம்பிய போதும் அபிநயாவை உறுதியாக திருமணம் செய்து கொள்வேன் என்று பார்த்திபன் கூறியிருக்கிறார். இதனால் அபிநயாவும் அவருடன் பழகி வந்துள்ளார்.
இந்நிலையில் பார்த்திபனுக்கு வேறொரு பெண்ணுடன் அவரது பெற்றோர் நிச்சயதார்த்தம் செய்துள்ளனர். மேலும் வருகின்ற ஆறாம் தேதி அவருக்கு திருமணம் செய்யவும் முடிவு செய்துள்ளனர். இதைக் கேள்விப்பட்ட அபிநயா பார்த்திபனுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டிருக்கிறார். அப்போது அவரை தனியாக பேசுவதற்காக தனது மோட்டார் சைக்கிளில் அழைத்துச் சென்றுள்ளார் பார்த்திபன். இந்நிலையில் திருச்சி சிதம்பரம் தேசிய நெடுஞ்சாலையில் உடையார் பள்ளம் அருகே வரும்போது அவர்கள் வந்த வாகனம் நிலைத்தடுமாறி விபத்தில் சிக்கியதாக பார்த்திபன் தெரிவித்துள்ளார். இதில் தலையில் காயம் ஏற்பட்ட அவர் படுகாயமடைந்து போராடிய தனது காதலியை அங்கிருந்து பள்ளத்தில் தள்ளிவிட்டு தப்பிச் சென்றிருக்கிறார்.
பள்ளத்தில் விழுந்ததால் உதவிக்கு ஆள் இல்லாமல் உயிருக்கு போராடிய அபிநயா பரிதாபமாக இருந்துள்ளார். இன்று காலை ஒரு பெண் சடலம் பள்ளத்தில் இருப்பதை பார்த்து பொதுமக்கள் காவல்துறைக்கு தகவல் கொடுக்கவே அவர்கள் விரைந்து வந்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் பார்த்திபனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். உண்மையாகவே விபத்து நடந்ததா அல்லது பார்த்திபனே அபிநயாவை கொலை செய்துவிட்டு நாடகம் ஆடுகிறாரா என்ற கோணத்தில் காவல்துறை விசாரணை செய்து வருகிறது.