#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் பட்டாக்கத்தியால் கேக் வெட்டிய புதுமண தம்பதி! அங்கு நடந்தது என்ன? வைரல் வீடியோ!
அந்த வீடியோவில், திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்கு வந்த வாலிபர்கள் சிலர், மணமக்களிடம் பட்டாக்கத்தியை கொடுத்து கேக் வெட்ட வற்புறுத்துகிறார்கள். பட்டாக்கத்தியை கையில் வாங்கும் புதுமண தம்பதி, அதை கொண்டு கேக் வெட்டுகின்றனர்
இந்தநிலையில், திருமண விழாவில் உடன் படிக்கும் கல்லூரி மாணவர்கள் அன்பளிப்பாக வழங்கிய பட்டாக்கத்தியை வைத்து கேக் வெட்டி கொண்டாடிய மணமகன் புவனேஷ் மனைவியுடன் மாமியார் வீட்டுக்கு விருந்துக்கு சென்றபோது போலீசார் கைது செய்தனர்.
இதுகுறித்து போலீசார் கூறுகையில் பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் ரூட் தல வைத்திருப்பதால் திருவேற்காடு, பூந்தமல்லி, எம்.எம்.டி.ஏ. காலனி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள முன்னாள், தற்போது ரூட் தல மாணவர்கள் கும்பலாக திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
திருமண வரவேற்பு விழாவில் பட்டாக்கத்தியால் கேக் வெட்டிய மணமகன் புவனேஷ்/24 அவனது நண்பர்கள் விக்னேஷ் குமார், சதீஷ், விக்னேஷ் ஆகியோரை காவல்துறை கைது செய்தது.
— Leo Jude (@lalithjude76) January 29, 2020
பின்னர் அம்பத்தூர் துணை ஆணையர் ஈஸ்வரன் முன்னிலையில் 4 பேரிடம் உறுதி மொழி பிணைப்பத்திரம் எழுதி வாங்கப்பட்டு விடுவிக்கப்பட்டனர் pic.twitter.com/G8y5HLsBXH
அந்த நிகழ்ச்சியில் என்றும் பூந்தமல்லி பகுதி ரூட் தல புவனேஷ் தான் என்று கூறி 3 அடி பட்டாக்கத்தியை கல்லூரி மாணவர்கள் அனைவரும் ஒன்றாக பரிசு அளித்தனர். பிறகு மணமேடையிலேயே கேக் வைத்து பரிசு அளித்த பட்டாக்கத்தியால் புவனேஷ் மற்றும் அவரது மனைவி நந்தினி ஆகியோர் கரகோஷங்களுடன் கேக் வெட்டியது தெரியவந்தது.
இதனையடுத்து புவனேஷ், நந்தினி மற்றும் விக்கி என்ற மாணவரிடம், நேற்று மாலை வரை, போலீசார் விசாரணை நடத்தினர். பின்னர் துணை கமிஷனரிடம்,அழைத்து சென்று அவர்களுக்கு அறிவுரை வழங்கி, வழக்கு விசாரணைக்கு ஒத்துழைக்க வேண்டும் என்ற நிபந்தனையுடன், எழுதி வாங்கி அனுப்பினர்.